

புதுடெல்லி,
பசுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்கப்படும் என மத்திய கால்நடை, பால் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரான கிரிராஜ் சிங் அறிவித்துள்ளார். இதை அவர் மகராஷ்டிராவின் நாக்பூரில் இன்று 'மதர் டெய்ரி' நிறுவனத்தின் ஒரு விழாவில் பேசியபோது தெரிவித்துள்ளார்.
இது குறித்து கிரிராஜ் சிங் பேசும்போது, ''பசு மாடுகளின் ஆண், பெண் பிறப்பை உறுதி செய்யும் ஐவிஎஃப் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்மூலம், பசுக்கள் மட்டுமே பிறந்து விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும். இதற்காக பசு உற்பத்தி தொழிற்சாலை அரசு அமைக்கும்'' எனத் தெரிவித்தார்.
ஐவிஎஃப் தொழில்நுட்பம் மூலம் பால் தராத பசுக்களும் 20 லிட்டர் வரை தரத் தொடங்கிவிடும் எனவும் அமைச்சர் கிரிராஜ் தகவல் அளித்தார். இது நாட்டில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
-ஆர்.ஷபிமுன்னா