

ஷிர்பூர்
மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் நேற்று நைட்ரஜன் காஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். 58 பேர் படுகாயமடைந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டம் ஷிர்பூர் தாலுகா, வாகடி கிராமத்தில், மருந்து தயாரிப்பதற் கான ரசாயனங்களை தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் சுமார் 100 தொழிலாளர்கள் நேற்று காலையில் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. பின்னர் தீ மளமள வென பரவி உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், 20 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் பேரிடர் மீட்புக் குழுவினர், போலீஸார் உள்ளிட் டோரும் மீட்புப் பணியில் ஈடுபட்ட னர். இந்த விபத்தில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். படுகாய மடைந்த 58 பேர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, “வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். தொழிற்சாலையில் இருப்பு வைக் கப்பட்டுள்ள ரசாயன பேரல் ஒன்றி லிருந்து கசிவு ஏற்பட்டதாக கூறப்படு கிறது. இதனால் அங்கிருந்த நைட்ரஜன் காஸ் சிலிண்டர்கள் வெடித்ததே தீ விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசார ணையில் தெரியவந்துள்ளது” என்றனர்.
ரூ.5 லட்சம் இழப்பீடு
இந்த விபத்தில் உயிரிழந்தவர் களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், அவர் களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அமித் ஷா இரங்கல்
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “மகராஷ்டிரா வில் தொழிற்சாலை வெடிவிபத்து குறித்த செய்தியைக் கேட்டு வேதனை அடைந்தேன். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை தொலை பேசியில் தொடர்புகொண்டு, இந்த விபத்து குறித்து கேட்டறிந்தேன். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக அவர் தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங் கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய் கிறேன்” என பதிவிட்டுள்ளார்.