Published : 01 Sep 2019 07:52 AM
Last Updated : 01 Sep 2019 07:52 AM

வளர்ச்சிக்கு உதவுமா வங்கிகள் இணைப்பு? 

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்தியப் பொருளாதாரம், பெருத்த சரிவில் இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 6%க்கும் கீழே வந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சரிவைச் சமாளித்து, மீண்டும் விரைந்த வளர்ச்சிக்கு வழிகோலுகிற திட் டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

வங்கி மறுமுதலீட்டுக்கு ரூ 70,000 கோடி என்கிற பட்ஜெட் அறிவிப்பு, வங்கி அல்லா நிதி நிறுவனங்கள் அந்நிய நாட்டுக் கடன் பெற அனுமதி, இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, ‘ஏர் இந்தியா' போன்ற தொடர் இழப்பில் இயங்கி வரும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கல், பல்வேறு துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டை ஊக்குவித்தல், அதிகரித்தல் ஆகிய பொருளாதார முடிவுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

இந்த வரிசையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது 6 பொதுத்துறை வங்கிகளை, வேறு 4 பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கும் திட்டத்தை அவர் அறிவித்தார். இதன் விளைவாக, இந்தியாவில் பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆகக் குறைகிறது. ஏன் இந்த ‘திடீர்' நடவடிக்கை? இதனால் யாருக்கு என்ன பயன்? என்ன பாதிப்பு?

‘இனிமேல், நன்கு ஒருங்கிணைக்கப் பட்ட, போதுமான முதலீட்டு ஆதரவு கொண்டதாக வங்கிகள் இருக்கும். வங்கிகள் இணைப்பால் ஒரு சாமானி யனுக்கு, வங்கிப் பயன்பாட்டாளருக்கு உடனடி சாதகமோ, பாதகமோ இல்லை. தொழில் துறைக்கு, ஒட்டு மொத்த பொருளாதாரத்துக்கு, இது நன்மை பயக்கலாம். வங்கிப் பணியாளர்களுக்கு சில சிக்கல்கள் ஏற்படலாம்.

தனித்தனியே செயல்படும் வங்கிகள், ஒன்றிணைப்புக்குப் பின்னர், ஒரு மாபெரும் நிறுவனமாகப் பரிணமிக்கும். இதன் மூலம் நிர்வாகச் செலவுகள் மிச்சப்படும். முடிவெடுக்கும் திறன் மேம்படும். வலிமை வாய்ந்த நிறுவன மாய், சந்தையில் கூடுதல் மதிப்பு சாத்தியம் ஆகும். சுருங்கச் சொன்னால் - கூடுதல் வலிமை, கூடுதல் ஆதாயம்.

உலகின் மிகப் பெரிய நுகர்வோர் சந்தையை நாம் கொண்டுள்ளோம். இதுவே உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை நோக்கி நகர்ந்து வர முதற் காரணம். ஆனாலும், உலக வங்கிகளில் இந்திய வங்கி எதுவும் உன்னத இடத்தில் இல்லை. உலக அரங்கில் வலுவான, பெரிய வங்கி நிலையை நம்மால் ஏன் எட்ட முடியவில்லை?

ஏறத்தாழ மாநிலத்துக்கு ஒன்று என்கிற அளவில் பொதுத்துறை வங்கி கள் மிகுந்து உள்ளன. இவற்றை இணைப் பதன் மூலம், மிக வலுவான வங்கிக் கட்டமைப்பு உருவாகும். உலக அளவில் நமது பொருளாதார வல்லமையின் சின்ன மாக இது இருக்கும். தனித்தனியே வெவ்வேறு அமைப்புகளாக இருப்பவை ஒன்றிணைக்கப்பட்டால், நிர்வாக அமைப்புமுறை இன்னமும் சிறப்பாக அமைந்திட வாய்ப்பு உள்ளது. வணிக ரீதியான வெற்றி, மக்களுக்குக் கிடைக் கும் நேரடிப் பயன்கள் ஆகிய ஆதாயங் கள் பற்றி இப்போதே எதையும் அறுதி இட்டுக் கூறுவதற்கு இல்லை. ஆனால் முயற்சிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

எதிர்பார்த்தபடியே, இந்த முயற்சிக்கு எதிரான விமர்சனங்கள் வங்கி ஊழியர் களிடம் இருந்து வருகின்றன. அவர்களின் நியாயம், உரிமைகள் குறித்து நாம் கேள்வி கேட்கவில்லை. இதேபோன்று, இதனால் நீண்ட கால நன்மை விளைய லாம் என்று கருதிச் செயல்பட அரசுக்கு உள்ள அதிகாரத்தையும் நாம் மறுப்ப தற்கு இல்லை. ‘இந்த இணைப்பின் கார ணமாக வங்கி ஊழியர்களுக்கு எவ்வகை பாதிப்பும் இராது' என்று வருவாய்ச் செயலர் ராஜீவ் குமார் கூறுகிறார்.

வங்கி நிர்வாகங்கள், குற்றச்சாட்டு களுக்கு அப்பாற்பட்டதாக நேர்மையுடன் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படு தல் வேண்டும். சில நூறு ரூபாய் கல்விக் கடனைத் திரும்பச் செலுத்த இயலாத வறியவனைக் கட்டாயப்படுத்திக் கடன் வசூல் செய்ய முடிகிறது. பல நூறு கோடிகளுடன் ‘காணாமல்' போகிற கனவான்களைத் தவற விடுவது எவ்வகையில் நியாயம்? பெரு நிறுவனங்களை நெருக்குவதைவிட்டு சாமானியனைக் கசக்கிப் பிழிகிற வங்கிச் செயல்பாடுகள் முகம் சுளிக்க வைக்கின்றன. கடன் வழங்குவதில், கடனை வசூலிப்பதில், பொதுத்துறை வங்கிகள் நடுநிலையுடன் மனிதாபி மானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இதனை உறுதி செய்தாலே வங்கிகளின் மீது பொது மக்களின் நம்பிக்கை மீண்டும் துளிர்க்கும். வங்கி இணைப்பை விடவும் இந்த நடவடிக்கை அவசியமானது; அவசரமானது.

வங்கி இணைப்புக்கு எதிராக வைக்கப் படும் மற்றொரு வாதம் - இது தனியார் மயமாக்கலை, தனி முதலாளிகளை ஊக்குவிக்கும். இணைப்பு இல்லாமலும் இந்தக் குறைபாடுகள் நடந்தேறலாம். இணைப்புக்குப் பின்னர் இதற்கான சாத்தியங்கள் குறைந்து போகும் என்றுதான் தோன்றுகிறது.

பிறிதொரு கோணத்திலும் பார்க் கலாம். முதலாளிகள் என்றாலே மோசம் ஆனவர்கள் என்கிற சினிமாத்தனமான எண்ணம் மாற வேண்டும். சமூக சிந்தனையுடன் செயல்படுகிற எண்ணற்ற இந்திய முதலாளிகளின் பங்களிப்பு நமது பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கிறது. இதனை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

பொருளாதார வளர்ச்சியில் முதலீடு களின் பங்கு மிக முக்கியம் ஆனது. முத லீட்டாளர்கள் பக்கம் இருந்து, வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு வந்ததாகத் தெரிய வில்லை. தொழில், வர்த்தக அமைப்புகள் பொதுவாக, இணைப்பு அறிவிப்பை வரவேற்பது போலவே தோன்றுகிறது.

அப்படி ஆனால், வங்கிகள் இணைப்பு முற்றிலும் சரியான நடவடிக்கைதானா? ஓர் உண்மையை நாம் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். பொருளாதார நடவடிக் கைகளில், முற்றிலும் சரி; முற்றிலும் தவறு என்று முத்திரை குத்தவே முடியாது. ஒவ்வொருவரின் கருத்தும், சரியாகவும் தவறாகவும் இருக்க முடிகிற விந்தையான களம் இது. எதிர்மறை சிந்தனைகள் பெருகி, புதிய முயற்சிகளுக்கு சுதந்திரம் இல்லாத சூழல் உருவாதல் யாருக்கும் நல்லதல்ல.

இப்போதைக்கு அரசாங்கம் அறி வித்து இருக்கும் இணைப்பு நடவ டிக்கை, பொருளாதார வளர்ச்சிக்கு உத வும் என்கிற நம்பிக்கையில் எடுக்கப்பட்ட தீர்க்கமான முடிவாகத்தான் தோன்று கிறது. சாதக பாதகங்கள் தெளிவாகத் தெரிவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். நம்புவோம் - சாமானியர்கள் நலம் பெறுவார்கள்.

நம்பிக்கைதானே வாழ்க்கை...?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x