தேசிய குடிமக்கள் பதிவேடு; பெயர் நீக்கப்பட்டவர்கள் உடனடியாக வெளிநாட்டினராக அறிவிக்கப்பட மாட்டார்கள்: உள்துறை அமைச்சகம் உறுதி

தேசிய குடிமக்கள் பதிவேடு; பெயர் நீக்கப்பட்டவர்கள் உடனடியாக வெளிநாட்டினராக அறிவிக்கப்பட மாட்டார்கள்: உள்துறை அமைச்சகம் உறுதி
Updated on
1 min read

புதுடெல்லி
அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் நீக்கப்பட்டவர்கள் உடனடியாக வெளிநாட்டினராக அறிவிக்கப்பட மாட்டார்கள், அவர்கள் தீ்ர்ப்பாயத்தில் முறையிட வாய்ப்பு வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிபட்டியல் இன்று வெளியிடப்பட்டது. வரைவு பட்டியலில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இறுதிபட்டியலில் 19 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
வரைவு பட்டியலில் பெயர் விடுபட்ட 3,68,000 பேர் ஏற்கெனவே விண்ணப்பிக்கவில்லை அவர்களையும் சேர்த்து மொத்தம் 19,06,657 பேர் இறுதிபட்டியலில் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு பட்டியலில் நீக்கப்பட்ட 22 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதாவது
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை அசாம் மக்கள் அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களுக்கு சென்று தெரிந்து கொள்ளலாம். பட்டியல் முழுமையாக தொகுக்கப்பட்டு வரும் செப்டம்பர் -7ம் தேதி ஆன்லைனில் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் நீக்கப்பட்டவர்கள் உடனடியாக வெளிநாட்டினராக அறிவிக்கப்பட மாட்டார்கள், அவர்கள் தீ்ர்ப்பாயத்தில் முறையிட வாய்ப்பு வழங்கப்படும். வெளிநாட்டினர் என அறிவித்து யாரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட மாட்டார்கள். எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம்
இவ்வாறு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in