Published : 31 Aug 2019 11:02 AM
Last Updated : 31 Aug 2019 11:02 AM

‘‘வெளிநாட்டினர் மீதான வெறுப்பு வேறுபட்ட இந்தியர்கள் மீதான வெறுப்பாக மாறிவிடும்’’- சசிதரூர் எச்சரிக்கை

புதுடெல்லி
வெளிநாட்டினர் மீதான வெறுப்பு பின்னர் வேறுபட்ட இந்தியர்கள் மீதான வெறுப்பாக மாறிவிடும் என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் எச்சரித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிபட்டியல் இன்று வெளியிடப்பட்டது. வரைவு பட்டியலில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இறுதிபட்டியலில் 19 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

வரைவு பட்டியலில் பெயர் விடுபட்ட 3,68,000 பேர் ஏற்கெனவே விண்ணப்பிக்கவில்லை அவர்களையும் சேர்த்து மொத்தம் 19,06,657 பேர் இறுதிபட்டியலில் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு பட்டியலில் நீக்கப்பட்ட 22 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இறுதிப்பட்டியல் வெளியிட்டுள்ளதால் அசாமில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் போலீஸாருடன் துணை ராணுவப்படை வீரர்களும் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘தேசியத்திற்கும், வெளிநாட்டினர் மீதான எதிர்ப்புக்கும் இடையே குறைந்த இடைவெளி தான் உள்ளது. வெளிநாட்டினர் மீதான வெறுப்பு பின்னர் வேறுபட்ட இந்தியர்கள் மீதான வெறுப்பாக மாறிவிடும் என ரபிந்திரநாத் தாகூர் கூறினார். அவர் மிகச்சிறந்த முன்னுதாரண மனிதர்’’ என சசிதரூர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x