Published : 31 Aug 2019 08:45 AM
Last Updated : 31 Aug 2019 08:45 AM

உயிரிழந்த ஏழை புரோகிதர் வீட்டில் மூட்டை மூட்டையாக பணம்: இயந்திரம் மூலம் பணத்தை எண்ணிய உறவினர்கள் திகைப்பு

சுப்ரமணியம் சேமித்து வைத்திருந்த பணம் இயந்திரம் மூலம் எண்ணப் பட்டது.

என். மகேஷ்குமார்

அமராவதி 

உயிரிழந்த ஒரு ஏழை புரோகிதர் வீட்டில் மூட்டை, மூட்டையாக பணம் இருந்ததை பார்த்த அவரது உறவினர்கள் திகைப்பும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், துனி பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியம் (70). இவர் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு வரை அதே பகுதியில் உள்ள கோயிலில் பணியாற்றி வந்துள்ளார். ஆனால் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் இவர் தொடர்ந்து பணியாற்ற இயலவில்லை. மேலும், இவரது மனைவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். இவர் அனகாபள்ளியில் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், தான் பணியாற் றிய துனி பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த ஒரு வீட்டில் வசித்து வந்த சுப்ரமணியத்திற்கு சிலர் உண்ண உணவும், பணமும் கொடுத்து உதவி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இத னிடையே சுப்ரமணியம் உடல் நலம் குன்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இவரது மரணம் குறித்து இவரது மகன் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன்படி, அனை வரும் வந்து இறுதி சடங்குகளை செய்தனர். அதன் பின்னர், அந்த வீட்டில் இருந்த சுப்ர மணியத்துக்கு சொந்தமான பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறு, சிறு துணி மூட்டைகளை கண்டெடுத்தனர். அவைகளை திறந்து பார்த்து போது, உறவினர் கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆம். அந்த மூட்டைகளில் கட்டு, கட் டாக பணம் இருந்தது. இவை களை ஒரு பணம் எண்ணும் இயந்திரத்தை கொண்டு வந்து எண்ணினர்.

அப்போது ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமாக பணம் இருந்தது தெரியவந்தது. தனக்கு பின் னர் தனது சந்ததியினருக்கு சுப்ர மணியம் வயிற்றை கட்டி, வாயை கட்டி சேர்த்து வைத்திருப்பார் என உறவினர்கள் கூறினர். இப் பணம் அவரது மகனிடம் ஒப் படைக்கப்பட்டது. இதனை தனது தந்தையை போன்று ஏழ்மையில் கஷ்டப்படும் புரோகித குடும்பத் திற்கு கொடுத்து உதவுவேன் என அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x