கர்நாடக மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை?- அமைச்சர்களுடன் எடியூரப்பா ஆலோசனை

கர்நாடக மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை?- அமைச்சர்களுடன் எடியூரப்பா ஆலோசனை
Updated on
1 min read

இரா.வினோத்

பெங்களூரு

கர்நாடகாவில் மாட்டிறைச்சி விற் பனை செய்வதற்கு தடை விதிக்க முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகா பாஜகவின் பசு பாதுகாப்பு பிரிவுத் தலைவர் சித்தார்த் கோயங்கா தலைமையிலான குழுவினர் அண்மையில் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அதில், பசுவை கொல்வதற் கும், மாட்டிறைச்சி விற்பனை செய் வதற்கும் தடை விதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத் தனர். இதே போல, விஜயப்புரா எம்எல்ஏ பசவன கவுடா பாட்டீல் பசு பாதுகாப்புக்கு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என மனு அளித்தார்.

இதையடுத்து, மாட்டிறைச் சிக்கு தடை விதிப்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரி களுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதுகுறித்து சுற்றுலா மற்றும் கன்னட கலாசாரத் துறை அமைச்சர் சி.டி.ரவி கூறுகையில், கர்நாடகாவில் கடந்த 2010-ம் ஆண்டு பாஜக ஆட்சியின் போது மாட்டிறைச்சிக்கு தடை விதித்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு திரும்ப பெற்றுக் கொண்டது.

மீண்டும் பாஜக ஆட்சி அமைந் துள்ளதால், மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள் ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக் குழு, மாட் டிறைச்சிக்கு தடை விதித்துள்ள மாநிலங்களுக்கு சென்று, அங்கு இதை தடுப்பதற்காக மேற்கொள் ளப்பட்டுள்ள வழிமுறைகளை ஆய்வு செய்வார்கள். அந்த குழு அளிக்கும் அறிக்கையின்படி அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in