சுவாமி சின்மயானந்த் மீது பாலியல் புகார் கூறிய உ.பி. பெண் ராஜஸ்தானில் மீட்பு

சுவாமி சின்மயானந்த்
சுவாமி சின்மயானந்த்
Updated on
1 min read

ஷாஜகான்பூர்

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான சுவாமி சின்மயானந்த் மீது பாலியல் புகார் கூறிய இளம்பெண் ராஜஸ்தானில் மீட்கப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜ கான்பூரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கு, சுவாமி சின்மயா னந்த் பாலியல் தொல்லை கொடுத்த தாகத் தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ பதிவும் சமூக வலை தளங்களில் வெளியானது. சுவாமி சின்மயானந்தின் பெயரைக் குறிப் பிடாமல் இந்த வீடியோ வெளியிடப் பட்டது.

இந்நிலையில் பாலியல் தொல்லை கொடுத்து குறித்து அந்தப் பெண்ணின் தந்தை போலீ ஸில் புகார் கொடுத்தார். சின்மயா னந்தும் மேலும் சிலரும் தனது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த புகாரில் அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

ஷாஜகான்பூரில் உள்ள சுவாமி சின்மயானந்துக்கு சொந்தமான முமுக்சு ஆசிரமம் நடத்தும் கல்லூரியில் அந்த பெண் முது நிலைப் பட்ட படிப்புப் படித்து வந்தார். போலீஸில் புகார் கொடுத்த நிலையில் அந்தப் பெண் திடீரென மாயமாகியுள்ளார். இதைத் தொடர்ந்து சுவாமி சின்மயானந்த் மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணாமல் போன இளம்பெண்ணை போலீஸார் ராஜஸ்தானில் நேற்று முன்தினம் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து உத்தரபிரதேச போலீஸ் டிஜிபி ஓ.பி.சிங் நேற்று கூறும்போது, “காணாமல் போன அந்த பெண்ணை ராஜஸ்தானில் கண்டுபிடித்தோம். அவர் தற்போது உ.பி.க்கு அழைத்து வரப்படுகிறார். அவருடன் அவருடைய நண்பரும் இருந்தார்” என்றார்.

இதனிடையே உச்ச நீதிமன்றத் தில் சுவாமி சின்மயானந்த் சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தன் மீது பொய் வழக்கு தொடர்ந்திருப்பதாக சுவாமி சின்மயானந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சம்பந்தப் பட்ட பெண்ணை நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது அரசு சார்பில் ஆஜ ரான வழக்கறிஞர் கூறும்போது, அந்த பெண் ராஜஸ்தானில் மீட்கப்பட்டார் என்றும் அவர் ஷாஜகான்பூர் அழைத்து வரப்படுகி றார் என்றும் தற்போது பதேபூர் சிக்ரியை அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட அந்தப் பெண் நீதிமன்றத்தில் மாலையில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது தான் டெல்லியிலேயே தங்கியிருக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். அந்தப் பெண்ணுக்குத் தேவை யான பாதுகாப்பை போலீஸார் வழங்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in