Published : 30 Aug 2019 02:17 PM
Last Updated : 30 Aug 2019 02:17 PM

கலாச்சார ஒற்றுமையை ஊக்குவிக்க 12 மொழிகளில் தினமும் ஒரு வார்த்தை: ஊடகங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி,

கலாச்சார ஒற்றுமையை உறுதி செய்ய ஊடகங்கள் தினமும் ஒரு வார்த்தையை 10 முதல் 12 மொழிகளில் பிரசுரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரள பத்திரிகை நிகழ்ச்சி ஒன்றில் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, "இன்று நான் ஊடகங்களுக்கு ஓர் எளிமையான வேண்டுகோள் விடுக்கிறேன். நாம் ஏன் மொழிகளின் சக்தியை ஒருங்கிணைக்கக் கூடாது.

இதற்கு ஊடகங்கள் ஒரு பாலமாக செயல்பட வேண்டும். ஊடக பங்களிப்புடன் பல்வேறு மொழிகள் பேசுபவர்களை ஒருங்கிணைக்க முடியும். தினம் ஒரு வார்த்தையை குறைந்தது 10-ல் இருந்து 12 மொழிகளில் பிரசுரித்தால் ஓராண்டில் ஒரு நபர் சராசரியாக 300 வார்த்தைகளைக் கற்றுக் கொள்ள இயலும்.

இவ்வாறாக ஒருவர் மற்ற இந்திய மொழிகளைக் கற்கும்போது இந்திய கலாச்சாரத்தின் பொதுத்தன்மையை அங்கீகரித்து பாராட்ட இயலும்.
ஹரியாணாவில் உள்ள ஒருவர் மலையாளம் கற்றுக் கொள்வதையும், கர்நாடகாவில் உள்ள ஒரு குழுவினர் வங்க மொழி பயில்வதையும் எண்ணிப் பாருங்களேன்.

எல்லா தூரங்களும் முதல் அடியை எடுத்துவைப்பதன் மூலமாகவே கடக்கப்படுகின்றன. அப்படியான முதல் அடியை ஏன் நாம் எடுத்துவைக்கக் கூடாது.

இந்த உலகிலேயே இந்திய தேசத்தில் மட்டும்தான் இத்தனை மொழிகள் பேசப்படுகின்றன. அதுவும் ஒருவகையில் ஆக்கபூர்வமான சக்தியே. ஆனால், சில இடங்களில் மொழி துஷ்பிரயோகம் நடக்கிறது. சிலரின் சுயநலத்துக்காக தேசத்தின் போலியான சுவர்கள் கட்டமைக்கப்படுகின்றன.

ஆதலால் மொழிகலின் சக்தியை ஒருங்கிணைக்க வேண்டும்" என்றார்.

- ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x