Published : 30 Aug 2019 07:22 AM
Last Updated : 30 Aug 2019 07:22 AM

கடல் வழியாக குஜராத்தில் ஊடுருவ தீவிரவாதிகள் முயற்சி; பாகிஸ்தான் ஏவுகணை சோதனை: வன்முறையை தூண்டும் இம்ரான் கானுக்கு இந்தியா எச்சரிக்கை

புதுடெல்லி

பாகிஸ்தானில் கமாண்டோ பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் கடல் வழியாக குஜராத்தில் ஊடுருவ முயற்சி செய்து வருவதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கையாக அந்த மாநிலத்தின் துறைமுகங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங் களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன்கொண்ட ஏவு கணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் தீவிரவாதம், வன்முறையைத் தூண் டும் வகையில் பேசி வரும் அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இம்ரான் கான் மிரட்டல்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக ஐ.நா. சபை, வல்லரசு நாடு களிடம் முறையிட்டது. ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட ஐ.நா. சபை யும், வல்லரசு நாடுகளும் மறுத்து விட்டன.

சில நாட்களுக்கு முன்பு பாகிஸ் தான் பிரதமர் இம்ரான் கான், அந்த நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது "காஷ்மீருக்காக எந்த எல் லைக்கும் செல்வோம். அணு ஆயுத போருக்கும் தயாராக உள்ளோம்" என்று மிரட்டல் விடுத்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் கமாண்டோ பயிற்சி பெற்ற தீவிரவாதி கள் கடல் வழியாக குஜராத்தின் கட்ச் பகுதியில் ஊடுருவ திட்டமிட்டிருப்ப தாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கட்ச் பகுதியில் கண்ட்லா, முந்த்ரா துறைமுகங்கள் உள்ளன. இதில் கண்ட்லா துறைமுகத்தை அரசும், முந்த்ரா துறைமுகத்தை அதானி குழுமமும் நடத்துகின்றன. மேலும் இதே பகுதியில் ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ் நிறுவனம், ரஷ்யாவின் ரோஸ் நெப்ட் நிறுவனத்தின் எண்ணெய் சுத்தி கரிப்பு நிலையங்கள் செயல்படுகின் றன. தீவிரவாத அச்சுறுத்தலைத் தொடர்ந்து 2 துறைமுகங்களிலும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங் களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கண்ட்லா, முந்த்ரா துறைமுகங் களுக்கு வரும் அனைத்து கப்பல்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படு கின்றன. சந்தேகத்துக்கு இடமான கப்பல்கள், படகுகள் இந்திய கடல் எல்லைக்குள் தென்பட்டால் உடனடி யாக உள்ளூர் போலீஸார், பாதுகாப்புப் படைகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களுக்கும் கப்பல் மாலுமிகளுக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது.

எல்லை பாதுகாப்புப் படை, கடலோர காவல் படை, கடற்படை ஆகி யவை உஷார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. கடற்படை மூத்த தளபதி முரளிதர் பவார் கூறும்போது, "எத் தகைய அச்சுறுத்தலையும் எதிர் கொள்ள தயார் நிலையில் உள்ளோம். கடல் எல்லைப் பகுதிகள் மிகவும் உன் னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன" என்று தெரிவித்தார்.

கட்ச் பகுதியை சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி தனஞ்செய் வகேலா கூறும்போது, "உளவுத் துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து கண் காணிப்பு, பாதுகாப்பை பலமடங்கு அதிகரித்துள்ளோம்" என்று தெரிவித் தார்.

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை

இதனிடையே, பாகிஸ்தான் ராணு வம் நேற்று முன்தினம் இரவு அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவு கணை சோதனையை நடத்தியுள்ளது. ‘கஸ்நவி’ என்று பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை 290 கி.மீ. தூரம் சென்று குண்டுகளையும் அணு ஆயுதங்களை யும் வீசும் திறன் கொண்டது என்று பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடக செய்தித் தொடர் பாளர் ஆசிப் கபூர், ஏவுகணை சோதனை குறித்த வீடியோ காட்சி களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்கா கருத்து

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "காஷ்மீர் மக்களுக்காக வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி முதல் 12.30 மணி வரை பாகிஸ்தான் மக்கள் அனைவரும் பொது இடங் களில் கூடி குரல் எழுப்ப வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுக் குழு அண்மை யில் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கை யில், "இம்ரான் கான் ஆட்சிக் காலத் தில் ராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித் துள்ளது. குறிப்பாக வெளியுறவு, பாதுகாப்பு விவகாரங்களில் ராணு வமே முடிவெடுக்கிறது" என்று சுட்டிக் காட்டியுள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகை யில், ராணுவத்தின் கைப்பாவையாக இம்ரான் கான் பேசுகிறார், செயல்படு கிறார் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா எச்சரிக்கை

இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் டெல்லியில் நேற்று கூறியதாவது:

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்று வருவதாக தகவல் கள் கிடைத்துள்ளன. பாகிஸ்தான் அரசு, தீவிரவாதத்தை வெளியுறவு கொள்கையாகக் கடைப்பிடிக்கிறது.

அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கானின் அண்மைக்கால கருத்துகள் ஆட்சேபகரமாக உள்ளன. இந்தியா வில் தீவிரவாதம், வன்முறையைத் தூண்ட அவர் அழைப்பு விடுக்கிறார். இதனை வன்மையாகக் கண்டிக் கிறோம், இனியும் இதுபோல் பேசக் கூடாது என்று எச்சரிக்கிறோம்.

காஷ்மீரில் இயல்பு நிலை

காஷ்மீரில் ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை. ஒருவர்கூட உயிரிழக்கவில்லை. மருந்து, அத்தியா வசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கின்றன. அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் அரசு முயற்சி செய்து வருகிறது. இதுதொடர்பாக சர்வதேச அளவில் அந்த நாடு மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியில் முடியும்.

இந்தியாவை ஆத்திரமூட்டும் வகை யில் ‘கஸ்நவி’ ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியுள்ளது. எதையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது. இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கும் வகையில் பாகிஸ்தான் வான் எல்லையை மூடுவது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக எவ்வித தகவலும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x