Published : 29 Aug 2019 06:10 PM
Last Updated : 29 Aug 2019 06:10 PM

ம.பி.யில் 40 நதிகளை புதுப்பித்து காப்பாற்ற அரசு தீவிரம்

போபால்

மத்திய பிரதேசத்தில் 300 க்கும் மேற்பட்ட ஆறுகள் அழிந்து வரும் நிலையில், அதில் 40 நதிகளை புதுப்பித்து காப்பாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து உயரதிகாரிகள் தெரிவித்தாவது:

மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக நீர் உரிமைச் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதற்குத் தேவையான நீரைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, 'நீர் உரிமைச் சட்டம்' வரைவு இறுதி செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி 36 மாவட்டங்களில் பாயும் சிந்த்வாரா, நீமுச், அகர்-மால்வா, அலிராஜ்பூர், சத்தர்பூர், சியோனி, ஷாஹ்தோல் மற்றும் ஷியோபூர் உள்ளிட்ட 40 நதிகளையாவது காப்பாற்ற வேண்டுமென அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த நிலையில், மழை மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பை ஊக்குவிக்கும் பிரச்சாரமும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நீர்வளம், பொது சுகாதார பொறியியல் மற்றும் வேளாண் துறைகள் பிரச்சாரத்தை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டாலும், இதில் பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

பாரம்பரிய நீர் ஆதாரங்களை புதுப்பிக்க ஒரு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நதிகளைப் பொருத்தவரை, மழைக்காலத்தில் நான்கு மாதங்களுக்கு மட்டுமே நீர் பாய்கிறது. ஆண்டு முழுவதும் இந்த ஓட்டத்தைத் தக்கவைக்க 'நதி புத்துயிர்' திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்வகையில் கீழ் குளங்கள் மற்றும் அணைகள் கட்டப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பந்தேல்கண்டில் நீர் பாதுகாப்பில் பணிபுரியும் அலகாபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ராம் பாபு திவாரி கூறுகையில், "ஆறுகள் மற்றும் இயற்கையான நீர்க் கட்டமைப்புகள் அழிந்துவருவதே நீர் நெருக்கடிக்கு முக்கிய காரணங்கள். ஒருகாலத்தில் பந்தேல்கண்டில் ஆயிரக்கணக்கான குளங்களும் கிணறுகளும் இருந்தன. இந்த இயற்கை அமைப்புகளின் இழப்பு பெரும் நெருக்கடியை நமக்கு ஏற்படுத்தியுள்ளது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x