காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்தானதால் முக்கியத்துவம் இழக்கும் பிரிவினைவாதிகள்

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்தானதால் முக்கியத்துவம் இழக்கும் பிரிவினைவாதிகள்
Updated on
2 min read

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்தானதால் பிரிவினைவாதிகள் தமது முக்கியத் துவத்தை இழப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இதன் பிறகு அம்மாநிலத்தின் நிலைமை முற்றி லும் மாறும் எனவும் கருதப் படுகிறது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. அதுவரையும் சிறப்பு அந்தஸ்தை அனுபவித்த அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களால் இந்தியாவின் முழு அங்கமாக செயல்பட முடி யாமல் இருந்துள்ளது. இதே காரணத்தால் இந்தியாவின் மற்ற மாநிலங்களின் திட்டங்களையும் அமலாக்க முடியாமல் இருப்ப தாகவும் மத்திய அரசு கூறி வந்தது. இந்த சூழலை சாதகமாக்கி ஜம்மு-காஷ்மீரின் பிரிவினைவாதிகள் அங்கு அரசியல் செய்து வந்தனர். இதற்கு உதவியாக பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகள் மற்றும் அந்நாட்டின் அரசும் இருந்து வந்தன. இந்நிலை, சிறப்பு அந்தஸ்து ரத்தானதால் மாறும் சூழல் ஏற்பட்டு வருவதாகக் கருதப்படுகிறது.

இதனால், அம்மாநிலத்தின் பிரி வினைவாதிகள் தங்கள் முக்கியத் துவத்தை மெல்ல இழக்கும் நிலை யும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும் போது, “சிறப்பு அந்தஸ்து என்பது பிரிவினைவாதிகளால் இதுவரை தவறாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதை ரத்து செய்ததால் நிலவும் சூழல் தற்காலிகமானதே. இதனால், அவர்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்து, ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் சொர்க்க பூமியாக மாறும்.

அங்கு தடுப்புக் காவலில் வைக் கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்க உள்ளார். இதுதொடர்பான முடிவு எடுக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தவும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், இந்த விஷயத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக தவிர மற்ற அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு சாதகமாகவே உள்ளன” எனத் தெரிவித்தன.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப் பட்ட பிறகு இதுவரை சுமார் 800 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட் டுள்ளதாகக் கருதப்படுகிறது. இதில், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் அரசியல் கட்சித் தலைவர்களான சஜாத் லோன், குடிமைப்பணி தேர் வில் முதல் இடம் பெற்றவரும், தன் ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்து அரசியல் கட்சி துவக்கியவருமான ஷா பைசலும் இடம் பெற்றுள்ளனர்.

இதுபோன்ற சூழல் மாறிய பின் ஜம்மு-காஷ்மீரின் சட்டப்பேர வைக்கு தேர்தலும் நடத்தப்பட உள்ளது. இங்கு புதிய அரசு அமைந்த பிறகு மாநிலத்தில் முற் றிலுமாக அமைதி திரும்பும் என மத்திய அரசு நம்புகிறது. இதன் பிறகும் பாகிஸ்தான் தனது தீவிர வாத நடவடிக்கைகளை ஜம்மு-காஷ்மீரில் தொடரவும் வாய்ப்புகள் உள்ளன. இதற்காக, அந்நாடு ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் உதவியை நாடுவதாகவும் தகவல் கள் வெளியாகி உள்ளன. எனினும், இவர்களுக்கு முன்பு போல் ஜம்மு- காஷ்மீர்வாசிகளின் ஆதரவு கிடைக் காது என மத்திய அரசு நம்புகிறது.

பிரிவினைவாதிகளும் முக்கியத் துவம் இழப்பதால் தீவிரவாதி களுக்கு அடைக்கலம் கிடைப்பதும் சாத்தியமில்லை. எனவே, அங்கு தன் பாதுகாப்பை தொடரும் இந்திய ராணுவம் மிக எளிதாக தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்கி விடும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கருதப் படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in