

இரா.வினோத்
பெங்களூரு
கர்நாடகாவில் முதல்வர் எடி யூரப்பா தலைமையிலான அமைச் சரவையில் இடம்பிடிக்க பாஜக மூத்த தலைவர்கள் பலரும் போட் டிப் போட்ட நிலையில், கடந்த வாரம் 17 பேருக்கு மட்டும் அமைச் சரவையில் வாய்ப்பு வழங்கப் பட்டது.
யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், கோவிந்த் கார்ஜோள், லட்சுமண் சவதி, அஷ்வத் நாராயண் ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
இதனிடையே, துணை முதல் வர் பதவி கிடைக்காததால் முன் னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர்கள் ஈஸ்வரப்பா, அசோகா ஆகியோர் அதிருப்தி அடைந்துள்ளனனர். இதேபோல், கட்சியின் மூத்த தலை வர்களான சி.டி.ரவி, ராமுலு ஆகியோரும் அதிருப்தியில் இருப் பதாக தெரிகிறது.
இந்த சூழலில், முதல்வர் எடியூரப்பாவை சந்தித்த அவர்கள், தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக எச்சரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
இதற்கிடையே, ஸ்ரீராமுலுவின் ஆதரவாளர்கள் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, எடியூரப்பா ஆகியோரின் உருவப்படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், முந்தைய குமாரசாமி ஆட்சியைப் போலவே எடியூரப்பா ஆட்சியிலும் குழப்பம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த எடியூரப்பா ,அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர்களை சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கினார். ஜெகதீஷ் ஷெட்டர், ஈஸ்வரப் பாவை நேரில் சந்தித்த அவர், எவ் வித முரண்பாடும் இல்லாமல் ஆட்சியை நடத்த ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், பாஜக மேலிடத் தலைவர் முரளிதர ராவ், எடியூரப் பாவை நேற்று சந்தித்து பேசினார். அப்போது பாஜக ஆட்சிக்கு இடையூறாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மேலிடம் கூறியதாக தெரிவித்தார். மேலும், அமைச்சரவையில் வழங் கப்பட்ட பொறுப்பை ஏற்க விரும் பாதவர்களை பொறுப்பில் இருந்து நீக்குமாறும் கட்சி மேலிடம் உத் தரவிட்டுள்ளதாக எடியூரப்பாவிடம் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, துணை முதல்வர் பதவி கோரி போராட்டத்தில் ஈடு படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடியூரப்பா எச்சரித்துள்ளார்.