

வயநாடு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக் கும் வயநாடு மக்களின் வாழ்வா தாரத்தை மீட்டெடுக்க பாடு படுவேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி உறுதிபடத் தெரிவித்தார்.
தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்ததன் காரணமாக, கேரளா வில் இம்மாத தொடக்கத்தில் 3 வாரங்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், அம் மாநிலத்தின் கோழிக்கோடு, வய நாடு, பத்தனம்திட்டா உட்பட பெரும் பாலான மாவட்டங்கள் வெள்ளத் தில் மூழ்கின. மேலும், வெள்ளம் காரணமாக ஏற்பட்ட நிலச் சரிவு களால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்தனர்.
வெள்ளம், நிலச்சரிவு ஆகிய பேரிடர்களுக்கு அம்மாநிலத்தில் இதுவரை 125 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் மாயமாகியுள்ளனர்.
இந்நிலையில், தமது மக் களவைத் தொகுதியான வயநாட் டில், வெள்ளம் பாதித்த பகுதி களை ராகுல் காந்தி நேற்று பார்வை யிட்டார். மேலும், அங்குள்ள முகாம் களில் தங்கியிருந்த மக்களையும் அவர் சந்தித்து நிவாரணப் பொருட் களை வழங்கினார்.
இதையடுத்து, அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:
வயநாட்டில் வெள்ளத்தால் கடுமையான சேதங்கள் ஏற் பட்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கா னோர் தங்கள் வீடுகளையும், உடை மைகளையும் இழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். மேலும், உயிரிழந்தவர்களின் குடும் பத்தினருக்கு அதிக அளவில் இழப் பீடுத் தொகை வழங்க கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகளிடம் காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து வலியுறுத்துவேன். அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் வரை போராடுவேன். அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க பாடுபடுவேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
இந்நிலையில், வயநாடு தொகுதிக்கு உட்பட்ட கோழிக் கோடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ராகுல் காந்தி இன்று பார்வையிடவுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன - பிடிஐ