Published : 28 Aug 2019 07:20 PM
Last Updated : 28 Aug 2019 07:20 PM

ராகுல் காந்தி பாகிஸ்தானால் விரும்பப்படுகிறார்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சனம்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி :கோப்புப்படம்

அமேதி,

ராகுல் காந்தியை பாகிஸ்தானுக்குத்தான் அதிகமாக பிடித்திருக்கிறது, தேசியக் கொடி மீதுகூட அவருக்கு குறைவான அக்கறைதான் இருக்கிறது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். ராகுல் காந்தியின் கூற்றை சுட்டிக் காட்டி ஐ.நா.வில் பாகிஸ்தான் கடிதம் அளித்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் சூழலை விளக்கியது.

இந்த விவகாரத்தால் அதிருப்தி அடைந்த ராகுல் காந்தி, காஷ்மீர் எங்கள் உள்நாட்டு பிரச்சினை இதில் பாகிஸ்தான் தலையிடக்கூடாது என்று ட்விட்டரில் இன்று காட்டமாக அறிக்கை விடுத்தார்.

ராகுல் காந்தியின் அறிக்கையை விமர்சித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று அமேதியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“ராகுல் காந்தியிடம் இருந்து ஆதரவு வருவது பாகிஸ்தானுக்கு முதல் முறை அல்ல. நாட்டின் துரதிர்ஷ்டம் என்னவென்றால் தேசத்தின் கொடியை பற்றி குறைவாகச் சிந்தித்து, அதன் மதிப்புகள், மாண்புகள் பற்றி குறைவாக மதிப்பிடும் ஒரு தலைவர் இங்கு இருக்கிறார். ஆனால், அந்த தலைவர் எதிரிநாட்டால் அதிகமாக விரும்பப்படுகிறார்.

காஷ்மீருக்கான சிறப்புஅந்தஸ்த்தை ரத்து செய்வது குறித்து நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். அப்போது, நாட்டுக்கு ஒருதேசியக் கொடி, ஒருஅரசியலமைப்புச் சட்டம்தான் இருக்கும் என்று அவர் கூறியவுடன், சில காங்கிரஸ் தலைவர்கள் திகைத்துவிட்டார்கள்.

அவர்களின் எதிர்ப்புக் குரல்கள் அனைத்தும் ராகுல் காந்தியின் உத்தரவின் படியே வந்தது. காங்கிரஸ் கட்சி இந்தியாவை பிளவுபடுத்தும் மனநிலையில்தான் நினைக்கிறது.

காங்கிரஸ் கட்சி, ஜம்மு காஷ்மீரும், லடாக் பகுதியும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள்தான் என்று உணர வேண்டும். பிரதமர் மோடியின் ஆட்சியில் ஒவ்வொரு வீட்டிலும் வளர்ச்சி வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

ராகுல் காந்தி நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டாமல் இருந்தாலே, நாடு சிறப்பாக இருக்கும். இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x