உலகின் தலைசிறந்த 100 இடங்கள் பட்டியலில் படேல் சிலை: பிரதமர் மோடி மகிழ்ச்சி ட்வீட்

உலகின் தலைசிறந்த 100 இடங்கள் பட்டியலில் படேல் சிலை: பிரதமர் மோடி மகிழ்ச்சி ட்வீட்
Updated on
1 min read

புதுடெல்லி,

டைம் இதழின் 2019-ம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த 100 இடங்கள் பட்டியலில் படேல் சிலை இடம்பெற்றுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சிறப்பான செய்தி. ஒற்றுமையை வலியுறுத்தும் படேலின் சிலை டைம் இதழின் 2019-ம் ஆண்டுக்கான உலகில் தலைசிறந்த 100 இடங்கள் பட்டியலில் இயம்பெற்றுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர்தான் சிலை நிறுவப்பட்ட பின்னர் ஒரே நாளில் 34,000 பேர் அதனைப் பார்த்த ரசித்தனர் என்ற சாதனை செய்தி வெளியானது. படேல் சிலை பிரபலமான சுற்றுலா தலமாக உருவாவது தொடர்பான செய்திகள் மகிழ்ச்சியளிக்கின்றன" எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் துணை பிரதமர் சர்தார் வல்லபபாய் படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதை நதிக் கரையில் 597 அடி உயரத்தில் பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரமான சிலை என்ற அந்தஸ்தைக் கொண்ட படேலின் ஒற்றுமையின் சிலை (ஸ்டேட்சூ ஆஃப் யூனிட்டி) கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளன்று நிறுவப்பட்டது.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை இணைத்தவர் என்பதால் படேல் சிலைக்கு ஒற்றுமையின் சிலை (Statue Of Unity) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in