ஜாமீன் பெற ரூ.40 கோடி லஞ்சம் தர முயற்சி: ஜனார்தன் ரெட்டிக்கு எதிராக முன்னாள் நீதிபதி வாக்குமூலம்

ஜாமீன் பெற ரூ.40 கோடி லஞ்சம் தர முயற்சி: ஜனார்தன் ரெட்டிக்கு எதிராக முன்னாள் நீதிபதி வாக்குமூலம்
Updated on
1 min read

என். மகேஷ்குமார்

ஹைதராபாத்

கர்நாடக மாநில முன்னாள் அமைச் சர் காலி ஜனார்தன் ரெட்டி ஜாமீன் பெறுவதற்காக தமக்கு ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்க முன் வந்ததாக முன்னாள் சிபிஐ நீதிபதி நாகமாருதி ஷர்மா நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.

கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், பிரபல தொழிலதி பருமான காலி ஜனார்தன் ரெட்டி கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுரங்க ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டார். பின்னர், ஹைதராபாத் சஞ்சல் கூடா சிறை யில் அவர் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கானது, ஹைதரா பாத் உயர் நீதிமன்றத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந் தது வந்தது. இவருக்கு ஜாமீன் வழங்க காலி ஜனார்தன் ரெட்டி யின் ஆட்கள் சிலர், அப்போதைய சிபிஐ நீதிமன்ற நீதிபதியாக இருந்த நாகமாருதி ஷர்மாவுக்கு ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்க பேரம் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு, தற்போது ஹைதராபாத் லஞ்ச ஒழிப்புத் துறைக்கான நீதிமன்றத் தில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் முன் னாள் நீதிபதி நாகமாருதி ஷர்மா நேற்று முன்தினம் நேரில் ஆஜ ராகி சாட்சியம் அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:

கடந்த 2011-ல் சிபிஐ நீதி மன்றத்தின் சிறப்பு நீதிபதியாக பதவி வகித்தேன். 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், உயர் நீதிமன்றப் பதிவாளர் நரசிம்ம ராவ் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர், அவரை சந்தித்து பேசினேன்.

அப்போது, ஜனார்தன் ரெட் டிக்கு ஜாமீன் வழங்கினால் ரூ.40 கோடி தருவதற்கு அவரதுஆத ரவாளர்கள் தயாராக இருப்பதாக வும் அவர் தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு, நான் அவரது வீட்டிலிருந்து வெளியேறி விட்டேன். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, இவ்வழக் கின் அடுத்தக்கட்ட விசாரணை, செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in