Published : 25 Jul 2015 09:36 AM
Last Updated : 25 Jul 2015 09:36 AM

எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது

வியாபம் ஊழல், லலித் மோடி விவகாரங்களால் நாடாளுமன்றத் தின் இருஅவைகளும் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் முடங்கின.

மக்களவை நேற்று காலை கூடிய நான்காவது நிமிடத்தில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப் பட்டது. மாநிலங்களவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டு முடங்கியது.

வியாபம் ஊழலுக்கு பொறுப்பேற்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரும் பதவி விலகக் கோரி கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின.

நான்காவது நாளாக மக்களவை நேற்று காலை கூடியது. அவை தொடங்கியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் மையப் பகுதியில் கூடி கோஷமிட்டனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை கூடிய 4-வது நிமிடத்திலேயே நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடியதும் எதிர்க் கட்சிகள் வியாபம், லலித் மோடி விவகாரங்களை எழுப்பின. இதனால் அவையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிற்பகல் 2.30 மணி வரை அவை ஒத்திவைக் கப்பட்டது. அதன்பின்னரும் அமைதி திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஊழல் விவகா ரங்கள் தொடர்பாக இரு அவை களிலும் விவாதத்துக்கு தயாராக இருப்பதாக அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் அதை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை.

சவுகான், வசுந்தரா, சுஷ்மா ஆகியோர் முதலில் ராஜினாமா செய்யட்டும், அதன்பிறகு விவாதத் துக்கு வருகிறோம் என்று எதிர்க் கட்சிகள் கூட்டாக அறிவித்துள் ளன. கடந்த 4 நாட்களாக இருதரப் பும் பிடிவாதமாக இருப்பதால் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் வாரம் முற்றிலுமாக முடங்கி யுள்ளது.

பாஜக தர்ணா

இதனிடையே பாஜக எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா நடத்தினர். ஊழல் புகாரில் சிக்கியுள்ள உத்தராகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத், இமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் உள்ளிட் டோர் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் கோஷ மிட்டனர்.

இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் கூறியபோது, ஆட்சி, அதிகாரம் பாஜக கையில் உள்ளது. அவர்கள் யாரை எதிர்த்து தர்ணா நடத்துகிறார்கள் என்பது புரியவில்லை என்றார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியபோது, நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வ விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. நாங்கள் வேறு என்ன செய்ய முடியும் என்றார்.

ரூ.35 கோடி இழப்பு ஏற்படும்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் நடத்த ஒரு நிமிடத்துக்கு ரூ.29 ஆயிரம் செலவாகிறது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் இதுவரை 6 சதவீத அலுவல்கள் மட்டுமே நடைபெற்றுள்ளன.

எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் 94 சதவீத அலுவல்கள் முடங்கியுள்ளன. இதேநிலை நீடித்தால் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் முடங்கக்கூடும். அந்த வகையில் ரூ.35 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x