

புதுடெல்லி
மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். இதைத்தொடர்ந்து அவர் இன்று காலை மறைந்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் வீட்டுக்கு செல்கிறார்.
பிரதமர் மோடி 5 நாட்கள் பயணமாக பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாட்டுக்குச் சென்றார். பிரான்ஸ் பயனத்தை முடித்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்குச் சென்றார்.
அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யனுடன் பிரதமர் மோடி சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களை முடிவு செய்தார். பின்னர் அங்கிருந்து பஹ்ரைன் நாட்டுக்கு முதல்முறையாக பிரதமர் மோடி சென்றார்.
பின்னர் மீண்டும் பிரான்ஸ் திரும்பிய பிரதமர் மோடி அங்கு நடைபெறும் அங்கு நடைபெற்ற ‘ஜி-7’ மாநாட்டில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த அமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லை எனினும் சிறப்பு அழைப்பாளராக இந்தியா பங்கேற்றது. மேலும் ஜப்பான், பிரான்ஸ்,ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார். தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.
மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். இதைத்தொடர்ந்து அவர் இன்று காலை மறைந்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் வீட்டுக்கு செல்கிறார்.
சுவாசக்கோளாறு உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக டெல்லிஎய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் ஜேட்லி, சனிக்கிழமை அன்று உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடந்தன.
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்ததால் பிரதமர் மோடி அருண் ஜேட்லியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை. எனினும் வெளிநாட்டில் இருந்தபடியே அருண் ஜேட்லியின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் தெரவித்தார். அப்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்தநிலையில் அவரசமாக நாடு திரும்ப வேண்டாம் என அருண் ஜேட்லியின் குடும்பத்தினர் மோடியை கேட்டுக்கொண்டனர். இதனால் நாடு திரும்பிய நிலையில் இன்று காலை பிரதமர் மோடி ஜேட்லியின் வீட்டுக்கு சென்றார்.