

காஷ்மீரில் பல்வேறு பிராந்திய கட்சி கள் சார்பில் தியாகிகள் தினம் அனு சரிக்கப்பட்டது. இந்த விழாவில் மாநில முதல்வர் முப்தி முகமது சையது பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி களை பாஜக முற்றிலுமாக புறக் கணித்தது.
காஷ்மீரில் டோக்ரா ஆட்சியாளர் களுக்கு எதிராக போராடிய அப்துல் குவாதீர் என்பவர் 1931 ஜூலை 13-ல் கைது செய்யப்பட்டு ஸ்ரீநகர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக சிறைக்கு வெளியே போராட்டம் நடத்தப் பட்டது. அவர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்தனர். இதை நினைவு கூரும் வகையில் பிராந்திய கட்சிகள், பிரிவினைவாத அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் தற்போது மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. இதில் மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முதல்வர் முப்தி முகமது சையது தியாகிகள் தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் கூட்டணி கட்சியைச் சேர்ந்த பாஜகவினர் இந்த நிகழ்ச்சிகளை முற்றிலுமாகப் புறக்கணித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக மிர்வாஸ் உமர் பரூக் உள் ளிட்ட பிரிவினைவாதத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். தலைநகர் ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதி களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டிருந்தன.