Published : 26 Aug 2019 01:12 PM
Last Updated : 26 Aug 2019 01:12 PM

மக்கள் வாழ விரும்பும் சிறந்த இடமாக ஜம்மு - காஷ்மீர் உருவாகும்: ஆளுநர் சத்யபால் மாலிக் நம்பிக்கை

புதுடெல்லி,

ஜம்மு - காஷ்மீர் மக்களுக்காக நாங்கள் ஆற்றப்போகும் பணியில் இன்னும் சில நாட்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் மக்களேகூட ஜம்மு - காஷ்மீரே வாழ்வதற்கு சிறந்த இடம் எனக் கூறும் சூழல் உருவாகும் எனக் கூறியிருக்கிறார் ஆளுநர் சத்யபால் மாலிக்.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. ஜம்மு - காஷ்மீர், லடாக் என்று இரு யூனியர் பிரதேசங்களாக மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் நிலவரம் குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக், "நாங்கள் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்துள்ளோம். இனி வரும் நாட்களில் நாங்கள் ஆற்றும் மக்கள் சேவையால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள்கூட ஜம்மு - காஷ்மீரே மக்கள் வாழ உகந்த பகுதி என்று கூறுவார்கள்.

காஷ்மீரில் இயல்பு நிலையே இருக்கிறது நம்பவில்லை என்றால் நேரில் வந்து பாருங்கள் என்றேன். ஆனால், நான் நேரில் வந்து நிலவரத்தைப் பாருங்கள் என்று கூறியதை முடிவற்றை சர்ச்சையாக நீட்டித்துக் கொண்டிருக்கிறார் ராகுல். மக்களை சந்திப்பேன், ராணுவத்தை சந்திப்பேன், காவலில் உள்ள அரசியல் தலைவர்களை சந்திபேன் என ராகுல் கூறினார். அவரது நிபந்தனைகளை ஏற்க மறுத்தேன். அதனால் சர்ச்சையை அரசு நிர்வாகத்திடம் விட்டுவிட்டேன்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்த அவர், "காஷ்மீரில் மட்டுமே பழைய நிலவரமே இருந்திருந்தால் முதல் வாரத்தில் மட்டுமே 50 பேர் இறந்திருப்பார்கள். இனி உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது என்பதுதான் எங்கள் இலக்கு.

10 நாட்கள் காஷ்மீரில் தொலைதொடர்பு இல்லாமல் போனது ஒன்றும் பெரிய பிரச்சினையில்லை. 10 நாட்களில் எந்த உயிரிழப்பும் இல்லை என்பதே பெரிய விஷயம்.

தொலைதொடர்பு சேவைகளை வழங்கிவருகிறோம். கள நிலவரத்தைப் பொறுத்து இந்த கெடுபிடிகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்படும்.

காஷ்மீரில் அத்தியாவசியப் பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை. ஈகைத் திருநாளை ஒட்ட்டி மக்களுக்கு இறைச்சி, பால், முட்டை, காய்கறிகள் கிடைப்பதை உறுதி செய்தோம். இன்னும் 10, 15 நாட்களில் உங்கள் கருத்துகள் எல்லாம் மாறும்" என்று கூறியிருந்தார்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x