

லக்னோ
மறைந்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மருத்துவமனையில் சேரும் முன்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதிக்கு சூரிய ஒளியில் இயங்கும் 200 மின் விளக்குகளை தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து வழங்கியுள்ளார்.
பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி சுவாசக்கோளாறு உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக டெல்லிஎய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பிற்பகல் 12.07 மணிக்கு அவரின் உயிர் பிரிந்தது. அவரது இறுதிச்சடங்குகள் நேற்று நடந்தன.
இந்த நிலையில் மறைந்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மருத்துவமனையில் சேரும் முன்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதிக்கு சூரிய ஒளியில் இயங்கும் 200 மின் விளக்குகளை தனது தொகுதி நிதியில் இருந்து வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு எம்.பி.க்கும் தொகுதி வளர்ச்சி நிதியாக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன்படி மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த அருண் ஜேட்லி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்திற்கு தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து உதவிகள் செய்ய முடியும்.
அதன்படி கடைசியாக ஜூலை 30ம்- தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு ஒரு சில நாட்கள் முன்பாக தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து 200 மின்விளக்குகள் அமைக்க ஒப்புதல் அளித்து ரேபரேலி மாவட்ட ஆட்சியர் நேஹா சர்மாவுக்கு கடிதம் வழங்கியுள்ளார். இதனை மாவட்ட ஆட்சியரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
(படவிளக்கம்: அருண் ஜேட்லியின் மனைவிக்கு ஆறுதல் கூறும் சோனியா காந்தி)
இதுபற்றி உள்ளூர் பாஜக தலைவர் பாஜ்பாய் கூறுகையில் ‘‘ரேபரேலி தொகுதி நீண்டகாலமாக காங்கிரஸ் வசம் இருந்தாலும், தொடர்ந்து இந்த தொகுதிக்கு நல்ல பணிகளை அருண் ஜேட்லி செய்து வந்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தொகுதி என்பதால் அரசியல் காழ்புணர்ச்சியுடன் பாரபட்சம் காட்டாமல் இந்த தொகுதிக்கு னது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து உதவியுள்ளார்.
நறுமணப் பொருட்கள் பூங்கா, மேம்பாலங்கள் உள்ளிட்டவை அமைக்க கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு பணிகள் நடக்கவில்லை. அருண்ஜேட்லி இதனை துரிதப்படுத்த பல நடவடிக்கை எடுத்தார்’’ என பாஜ்பாய் கூறினார்.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்