Published : 26 Aug 2019 11:58 AM
Last Updated : 26 Aug 2019 11:58 AM

ராணுவ லாரி எனக் கருதி வன்முறை கும்பல் கல்வீசி தாக்குதல்: காஷ்மீரில் சரக்கு லாரி ஓட்டுநர் பலி

பிரதிநிதித்துவப் படம்

ஸ்ரீநகர்

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தனியார் லாரி ஒன்றின் மீது நேற்று மாலை ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசியதில் லாரி ஓட்டுநர் ஒருவர் கொல்லப்பட்டார். அவர்கள் ராணுவ லாரி என நினைத்து அவ்வாறு கற்களை வீசியதாக போலீஸார் தெரிவித்தனர்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மாநிலத்தை இரண்டாக பிரித்த பிறகு அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பியதாகக் கூறப்பட்டாலும் இதனால் தொடர்ந்து எதிர்ப்பு உருவாகி கல்வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சிராடிபோரா உரான்ஹாலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் அதே ஊரைச் சேர்ந்த நூர் முகம்மது 42 என்பவர் லாரியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர் செலுத்தி வந்த வாகனம் பாதுகாப்புத் துறை வாகனம் என தவறாகக் கருதி ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசியுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வீசிய கற்கள் வாகனத்தைத் துளையிட்டுச் சென்று ஓட்டுநரின் தலையில் விழுந்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் அருகிலுள்ள பிஜ்பேரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கிருந்து அவரை ஸ்கிம்ஸ் சவுராவில் உள்ள ஷேர் இ காஷ்மீர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (ஸ்கிம்ஸ்) அனுப்பிவைக்கப்பட்டார்.

எனினும் அவர் அங்குள்ள மருத்துவர்கள் நூர்முகம்மது இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு, ஓட்டுநர் மீது கல் வீசிய நபரை கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் மீதான கொலை வழக்கை பிஜ்பேரா காவல் நிலையத்தில் போலீசார் பதிவு செய்தனர்.

இவ்வாறு காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் கல் வீசிய சம்பவத்தில் ஒரு சிறுமி பலத்த காயமடைந்தார், அதுகுறிததும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பொதுமக்கள் மீது கூட கற்களை வீசி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x