Published : 26 Aug 2019 11:32 AM
Last Updated : 26 Aug 2019 11:32 AM

குமாரசாமி என்னை எப்போதும் எதிரியாகவே பாவித்தார்: சித்தராமையா

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தன்னை எதிரியாகவே பாவித்ததாகவும் அதனால்தான் எல்லாப் பிரச்சினைகளும் விளைந்ததாகவும் கூறியுள்ளார் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சித்தராமையா.

கர்நாடகாவில் 14 மாதங்களாக இழுபறியில் நீடித்துவந்த மஜத (மதச்சார்பற்ற ஜனதா தளம்) - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கூட்டணி அரசு தோல்வியடைந்ததையடுத்து தற்போது எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி அங்கு நிலவி வருகிறது.

இந்நிலையில், ஆட்சியை இழந்த மஜத - காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் ஒருவரையொருவர் தாக்கிப் பேசி வருகின்றனர்.

இந்த வார்த்தைப் போரின் ஒரு பகுதியாக ஞாயிறன்று பேசிய சித்தராமையா, "குமாரசாமி என்னை எப்போதுமே நண்பராகவோ அல்லது நம்பிக்கைக்குரியவராகவோ பார்த்ததில்லை. அதற்குப் பதிலாக என்னை எதிரியாகவே பாவித்தார். அதனால்தான் மாநிலத்தில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது" எனக் கூறினார்.

முன்னதாக, தேவ கவுடா தனது மகன் குமாராசமிக்குப் பதிலாக பாஜகவின் எடியூரப்பா ஆட்சி செலுத்தட்டும் என்ற மனநிலையில் சித்தராமையா இருந்ததாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அதற்கு பதிலடியாகவே சித்தராமையாவின் இந்தக் கருத்து வந்திருக்கிறது.

இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "14 மாதங்கள் ஆட்சி காலத்தில் காங்கிரஸ் என்னை ஒரு கிளார்க் போலவே நடத்தியது. எவ்வளவு நாட்களுக்கு அடிமையாகவே இருப்பது? காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் என் முகத்தில் பேப்பர் கட்டை தூக்கி வீசி அவமானப்படுத்தினார். அரசியலில் இருந்து விலகிச் செல்லவேண்டும் என்று தோன்றினாலும் லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்களுக்காகவே இங்கு இருக்கிறேன்" எனக் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x