

புதுடெல்லி
பிரான்ஸில் தயாரிக்கப்பட்டு வரும் ரஃபேல் போர் விமானங்கள் செப்டம்பர் மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய விமானப் படையில் ‘மிக் -21' ரக போர் விமானங்களே அதிக அளவில் உள்ளன. 1950-களில் இருந்து இந்த போர் விமானங்களையே இந்தியா பயன் படுத்தி வருகிறது. தற்போது உலக அளவில் ஆயுதத் தொழில்நுட்பங் கள் வளர்ந்துவிட்ட சூழலில், மிக் -21 ரக விமானங்களால் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்ததும், இந்திய விமானப் படையை வலிமைப் படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, பிரான்ஸ் நாட்டிடம் இருந்து அதிநவீன ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக, அந்நாட்டின் ‘தஸ்ஸோ ஏவியேஷன்' நிறு வனத்துடன் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டது.
சுமார் ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத் தின்படி, இந்தியா கூறிய சில நவீன தொழில்நுட்பங்களுடன் ரஃபேல் போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
இந்த ரஃபேல் போர் விமானங் களானது, பிரான்ஸின் போர்டி யக்ஸ் நகரில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சில விமானங்களின் கட்டுமானம் முடிவடைந்துள்ளதாக கூறப்படு கிறது.
இந்நிலையில், முதல்கட்டமாக, சில ரஃபேல் விமானங்களை வரும் செப்டம்பர் மாதம் இந்தியா விடம் முறைப்படி ஒப்படைக் கப்படவுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், எத்தனை விமானங்கள் ஒப்படைக் கப்படுகின்றன என்பது குறித்து உறுதியாக தெரிய வரவில்லை.
ஆனால், அவ்வாறு ஒப்படைக் கப்படும் ரஃபேல் போர் விமானங் கள் உடனடியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படாது எனக் கூறப்படுகிறது. ரஃபேல் விமானங் களை இயக்குவது குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய விமானப் படை விமானிகளுக்கு பிரான்ஸில் பயிற்சி அளிக்கப்படும் என அந்நாட்டு பாதுகாப்புப் படை வட்டாரம் தெரிவித்துள்ளது.
எனவே, செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்பட்டாலும், இந்தியா வுக்கு அந்த ரஃபேல் போர் விமானங்கள் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரி விக்கின்றன.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்