

திருவனந்தபுரம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகப் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் பேசியபோது, “மக்களை சென்றடைக்யகூடிய மொழியில் பிரதமர் மோடி பேசுகிறார். அவரை பிசாசு போன்று பாவித்து விமர்சனம் செய்வது ஒருபோதும்
உதவாது” என்றார்.
இவரது கருத்துக்கு ஆதரவாக திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி நல்ல திட்டங்களை கொண்டு வரும்போது பாராட்ட வேண்டும். தவறான திட்டங்களை கொண்டு வரும்போது எதிர்க்க வேண்டும். கண்களை மூடிக் கொண்டு மோடியை எதிர்ப்பது சரியாக இருக்காது” என்றார்.
இதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லபள்ளி ராமச்சந்திரன் கூறியபோது, “சசி தரூரின் கருத்து துரதிஷ்டவசமானது. கடந்த 5 ஆண்டுகளாக மோடிக்கு எதிராகப் பேசி வரும் அவர் திடீரென தடம் மாறியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. அவர் எந்த வகையில் மோடிக்கு ஆதரவு அளிக்கிறார் என்பது புரியவில்லை” என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சென்னிதாலா கூறியபோது, “மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் மக்களின் நலனுக்கு விரோதமாக உள்ளன. பிரதமர் மோடியை எந்த வகையிலும் பாராட்ட முடியாது. மோடியின் தவறான கொள்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து குரல் கொடுக்கும்” என்றார்.
கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் சசி தரூரின் கருத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்