அடுத்த எண்ணுக்கு ‘ஹாய்’ அனுப்பியாச்சா?-  இணையத்தை கலக்கும் புதிய சவால்

அடுத்த எண்ணுக்கு ‘ஹாய்’ அனுப்பியாச்சா?-  இணையத்தை கலக்கும் புதிய சவால்
Updated on
1 min read

 புதுடெல்லி

ஐஸ் பக்கெட், நீல திமிங்கலம், மெமோ, பிட்னஸ், கிகி, பாட்டில் மூடி திறப்பு என இணையத்தில் புதிது புதிதாக சவால்கள் தோன்றி மறைகின்றன. அந்த வரிசையில் ‘நெய்பர் சேலஞ்ச்' என்ற புதிய சவால் இணையத்தை ஆட்டிப் படைத்து வருகிறது.

அதாவது மொபைல் போன் எண்ணுக்கு முந்தைய அல்லது பிந்தைய எண்ணுக்கு ‘ஹாய்' என்று தகவல் அனுப்பு கின்றனர். அடுத்த எண்ணுக்கு சொந்தக்காரர், "யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்" என்று கேள்வி எழுப்புகிறார். இரு தரப்பிலும் தகவல் பரிமாற்றங்கள் நீள்கின்றன. இந்த சவாலில் சிலர் நண்பர்களாகி விடுகின்றனர். வேறு சிலருக்கு மோசமான பதில் கள் பரிசாக கிடைக்கின்றன.

‘நெய்பர் சேலஞ்ச்' சவாலில் பங்கேற்றவர்கள் அவர்களது தகவல் பரிமாற்றங்களை அப் படியே சமூகவலை தளங் களில் பதிவிடுகின்றனர். சில பதிவுகள் சுவாரசியமாகவும் சில பதிவுகள் காரசாரமாகவும் உள்ளன. சிலர் பொய்களை அள்ளி வீசுகின்றனர்.

உலக முழுவதும் ‘நெய்பர் சேலஞ்ச்' காட்டுத் தீயாக பரவி வருகிறது. டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் ஆங்காங்கே சிலர் இந்த தீயை பற்ற வைத்து வருகின்றனர்.

பெங்களூரு பெண் வேதனை

பெங்களூரை சேர்ந்த ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் ஒருவர், ‘நெய்பர் சேலஞ்சில்' பங்கேற்ற கசப்பான அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

"எனது அடுத்த மொபைல் எண்ணுக்கு ‘ஹாய்' அனுப்பினேன். அந்த எண்ணின் சொந்தக்காரர் பெட்ரோல் நிலைய ஊழியர். நான் பெண் என்று அறிமுகம் செய்ததும் அடுத்தடுத்து அவர் எனக்கு ஆபாச தகவல்களை அனுப்ப தொடங்கிவிட்டார். வேறு வழி யின்றி அவரது எண்ணை முடக்கிவிட்டேன். பெண்களைப் பொறுத்தவரை இந்த சவால் ஆபத்தானது" என்று அவர் வேத னையுடன் குறிப்பிட்டுள்ளார்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in