Published : 25 Aug 2019 01:12 PM
Last Updated : 25 Aug 2019 01:12 PM

56 வயது: 90 மணிநேர சைக்கிள் பயணம்; 1,200 கிலோ மீட்டர் கடந்து இந்திய ராணுவ அதிகாரி சாதனை!

புதுடெல்லி

பிரான்சின் பிரபல சைக்கிள் சவாரி நிகழ்வான 1200 கிலோ மீட்டர் தொலைவு 'பாரீஸ் பிரெஸ்ட் பாரீஸ் சுற்றை' 90 மணிநேரத்தில் முடித்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவர்.

பிரான்சில் பிரபல சைக்கிள் சவாரி முறையான 'பாரீஸ் பிரெஸ்ட் பாரீஸ் சுற்று சைக்கிள் சவாரி' மிகவும் பழமையானதாகும். பாரீஸ் நகரத்திலிருந்து ஆரம்பித்து பிரான்ஸ் நாட்டின் கடற்கரை நகரான பிரெஸ்ட் வரை சென்று மீண்டும் பாரீஸிக்கு திரும்பிவர 1200 கி.மீ. தொலைவு ஆகும். இதனை 90 மணிநேரத்தில் கடக்க வேண்டும். அதுவும் இளைப்பாறுதல் ஓய்வு எதுவுமின்றி.

சைக்கிள் சவாரி, தடகளம் உள்ளிட்டவற்றில் சாதிக்க நினைப்பவர்கள் பலரும் உலகின் மிக நீண்ட பழமையான இந்த சைக்கிள் பயணத்தில் கலந்துகொள்வதை மிகவும் பெருமையாகக் கருதுகிறார்கள். இதில் 1931லிருந்து 31,125 பேர் கலந்துகொண்டு இதுவரை சாதனை படைத்துள்ளனர்.

இந்தஆண்டு மீண்டும் அப்படியொரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இந்திய ஆயுதப்படையைச் சேர்ந்த துணைத் தளபதி ஒருவர் கலந்துகொண்டுள்ளார்.

இந்திய ராணுவ அதிகாரியான லெப்டினென்ட் தளபதி, அனில் புரி (56) நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) 90 மணி நேரத்தில் 1200 கிலோமீட்டர் சைக்கிள் சவாரி செய்து தூக்கம், ஓய்வு இன்றி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட் ஜெனரல் பதவியில் உள்ள ஒருவர் இத்தகைய சாதனையை நிகழ்த்தியிருப்பது இதுவே முதல்முறை.



'பாரீஸ் பிரெஸ்ட் பாரீஸ் சுற்றில் கலந்துகொண்டு 90 மணி நேரம் இடைவிடாமல் தூக்கமின்றி சைக்கிள் ஓட்டியதன் மூலம் சுற்று முடித்ததற்காக லெப்டினன்ட் தளபதி அனில் புரிக்கு இந்திய ராணுவம் ட்விட்டரில் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x