Published : 25 Aug 2019 10:41 AM
Last Updated : 25 Aug 2019 10:41 AM

13 பேருக்கு வாழ்வளிக்கிறது இருவரின் உடல் உறுப்புகள்: மூளைச்சாவு அடைந்ததால் தானம்

பெங்களூரு

மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட இரு நோயாளிகளின் குடும்பத்தினர் அவர்கள் உறுப்புகளை உடல் உறுப்புகள் தேவைப்படும் 13 பேருக்கு தானம் செய்ய முடிவு செய்துள்ளதாக ஒரு தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதில் ஒருவர், 21 வயது தினசரி கூலி தொழிலாளி ஒரு விபத்தில் அடிபட்டு அவரது மூளை இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது குடும்பம் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்பை நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளது.

ஃபோர்டிஸில் மருத்துவர்கள் குழு ஐந்து உறுப்புகளை அறுவை சிகிச்சையின்மூலம் எடுத்தது. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் அதன் பன்னேர்கட்டா சாலை அலகுக்கும் இதயம் அதன் ஃபோர்டிஸின் சென்னை கிளைக்கும், இன்னொரு சிறுநீரகம் ஐ.என்.யு மருத்துவமனைக்கும் மற்றும் கார்னியாக்கள் நேத்ரதாமா கண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக ஃபோர்டீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூளைச்சாவு அடைந்த இன்னொருவர், ஒரு 30 வயது பெண், இவர் சித்ரதுர்கா மாவட்டத்திற்கு அருகே விபத்து ஏற்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக பன்னேர்கட்டா சாலையில் உள்ள ஃபோர்டிஸில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின்போது மருத்துவர்களால் மூளை இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரது குடும்பமும் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்துள்ளது அறிவித்தது.

ஃபோர்டிஸில் உள்ள மருத்துவர்கள் குழு எட்டு உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து எடுத்தது. ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஃபோர்டிஸ் மருத்துவமனை பன்னேர்கட்டா சாலை அலகுக்கு ஒதுக்கப்பட்டது.

மணிபால் மருத்துவமனைகளுக்கு இதய வால்வு, மின்தோ மருத்துவமனைக்கு கார்னியாஸ் நுரையீரல் ஃபோர்டிஸ் மலர், சென்னை, மற்றொரு சிறுநீரகம் மைசூரிலுள்ள ஜே.எஸ்.எஸ் மருத்துவமனைகள், சிறு குடல்களுடன் அடிவயிற்று சுவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஃபோர்ட்டிஸ் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் அன்புக்குரியவர்களின் உறுப்புகளை மற்றவர்களுக்கு தானம் செய்வதன் மூலம், தங்கள் வருத்தத்தை 13 பேருக்கு வாழ்க்கைப் பரிசாக மாற்றியுள்ளதாக ஃபோர்டிஸ் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x