

இரா.வினோத்
பெங்களூரு
கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை யில் இடம் கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள எம்எல்ஏக் கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த எடியூரப்பா பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை சந்தித்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
கர்நாடகாவில் முந்தைய குமாரசாமி ஆட்சியில் அமைச்சர் பதவி கிடைக்காததால் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் 17 பேர் ராஜி னாமா செய்தனர். இதனால் அவர் தலைமையிலான மஜத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து எடியூரப்பா கடந்த ஜூலை 26 -ம் தேதி கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார்.
இவரது அமைச்சரவையில் இடம்பிடிக்க பாஜக மூத்த தலைவர் கள், காங்கிரஸ் - மஜதவில் இருந்து விலகிய அதிருப்தி எம்எல்ஏக்கள் போட்டிப்போட்டதால் அமைச் சரவை விரிவாக்கம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதை எதிர்க்கட்சிகள் கண்டித்ததை தொடர்ந்து, கடந்த 19-ம் தேதி ஜெகதிஷ் ஷெட்டர், ஈஸ்வரப்பா, அசோகா உள்ளிட்ட 17 பேர் அமைச் சர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அமைச்சர் பதவி கிடைக்காததால், மூத்த எம்எல்ஏக் கள் திப்பே ரெட்டி, அங்காரா, பாலச்சந்திர ஜார்கிஹோளி, ரேணுகாச்சார்யா, அரவிந்த் லிம்பா வள்ளி உள்ளிட்டோர் அதிருப்தி அடைந்தனர். அமைச்சரவை பதவி யேற்பு நிகழ்ச்சியையும் புறக் கணித்த இவர்கள், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ரகசிய ஆலோசனை நடத்தினர்.
இதேபோல குமாரசாமி ஆட் சிக்கு எதிராக பாஜகவை ஆதரித்த 17 காங்கிரஸ், மஜத எம்எல்ஏக் களும் தங்களுக்கு அமைச்சர் பதவி கோரி போர்க்கொடி தூக்கி உள் ளனர். பாஜகவினருக்குள் நடக்கும் மோதலால் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா? என சந்தேகம் அடைந்துள்ள எம்.டி.பி.நாகராஜ், ரமேஷ் ஜார்கிஹோளி டெல்லிக்கு விரைந்துள்ளனர்.
இதனிடையே பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் ரேணுகாச்சார்யா, அரவிந்த் லிம்பாவள்ளி, பாலச் சந்திர ஜார்கிஹோளி உள்ளிட் டோரும் டெல்லிக்கு சென்றுள்ளனர். அங்கு முகாமிட்டு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்து எடியூரப்பாவுக்கு எதிராக புகார் அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையறிந்த எடியூரப்பா நேற்று முன்தினம் தன் மகன் விஜயேந்திரா, அமைச்சர் அஸ்வத் நாராயணா ஆகியோருடன் டெல்லி சென்றார். அமித் ஷாவை சந்திக்க திட்டமிட்டுள்ள அதிருப்தி பாஜக, காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை தனியார் விடுதியில் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்களது கோரிக்கையை ஏற்பதாக கூறி, சமாதானம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, எடியூரப்பா பாஜக தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அப்போது அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும், அதிருப்தி எம்எல்ஏக்களின் செயல்பாடு குறித்தும் விளக்கம் அளித்துள் ளார். மேலும் அதிருப்தியாளர்களை சமாளிக்க உடனடியாக அமைச் சரவையை விரிவாக்கம் செய்ய லாமா? யாருக்கு எந்த துறையை ஒதுக்கலாம் என்பது குறித்து ஆலோசித்தார்.
அதற்கு, யாருக்கு என்ன துறையை ஒதுக்குவது? துணை முதல்வர் பதவி வழங்கலாமா? அமைச்சரவை விரிவாக்கம் செய்ய லாமா? என்பதை எல்லாம் கர்நாடக பாஜக தலைவர்களே முடிவு எடுத்துக்கொள்ளுங்கள் என அமித் ஷா தெரிவித்ததாக கூறப்படு கிறது. அதேநேரம் ஆட்சியை குழப்பம் இல்லாமல் வழிநடத்தி செல்லுங்கள் என அறிவுரை வழங்கியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, எடியூரப்பா நேற்று ஜெகதிஷ் ஷெட்டர், ஈஸ் வரப்பா, மாதுசுவாமி உள்ளிட் டோருடன் ஆலோசனை நடத்தி னார். விரைவில் அதிருப்தி எம்எல்ஏக்களை சந்தித்து, சமா தானம் செய்யவும் திட்டமிட்டுள் ளார். மேலும் ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து, அமைச் சரவை விரிவாக்கம் குறித்தும் பேச உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
அதிருப்தி பாஜக எம்எல்ஏக் களும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ்,மஜத எம்எல்ஏக்களும் அமைச்சர் பதவி கேட்டு போர்க் கொடி தூக்கியுள்ளதால் எடியூரப்பா வுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.