

கொல்கத்தா
மேற்குவங்கத்தில் நடைபெறவுள்ள 3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள் ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42-ல் 18 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களில் வென்றது. மக்க ளவைத் தேர்தலில் அதிக இடங் களை கைப்பற்றியதால் 2021-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், மேற்குவங்கத் தில் காலியாக உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித் துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி, 2 தொகுதி களில் காங்கிரஸும், 1 தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் போட்டியிடும் எனத் தெரிகிறது.
மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ராவுடன் சோனியா காந்தி நேற்று முன்தினம் இரவு ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து, சோமன் மித்ரா கூறும்போது, “சட்டப்பேரவை இடைத் தேர்தலில் இடதுசாரி களுடன் இணைந்து போட்டியிடு வது குறித்து சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினேன். இடது சாரிகள் ஒப்புக்கொண்டால் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட லாம் என அவர் தெரிவித்தார்” என்றார்.
பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இந்நிலையில் காங்கிரஸும் இடதுசாரிகளும் இணைந்து போட்டியிட முடிவு செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.