Published : 25 Aug 2019 07:25 AM
Last Updated : 25 Aug 2019 07:25 AM

அருண் ஜேட்லி மறைவு பாஜகவுக்கு பேரிழப்பு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தது முதல் அவரது காவல ராகக் கருதப்பட்டவர் அருண் ஜேட்லி (66). அவரது மறைவு பாஜகவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் கண்ணும், காதும் இவர்தான், பிரதமருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்பட்டவர் அருண்ஜேட்லி. கடந்த 2002 குஜராத் கலவரத்துக்குப் பிறகு மோடியின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானது. அப் போது மோடியை மிக வலுவாக ஆதரித்துப் பேசினார் ஜேட்லி. அவர் பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டபோது எல்.கே.அத் வானி உள்ளிட்ட சில மூத்த தலை வர்களின் அதிருப்தி குரல் ஓங்கி ஒலித்தது. அப்போதும் மோடிக்கு ஆதரவாக முக்கிய பங்காற்றினார் ஜேட்லி. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதி யில் தோல்வியுற்றபோதும், அவரை மத்திய அமைச்சராக்கி ஜேட்லி மீது தனக்கிருந்த வலுவான நம் பிக்கையை மோடி உறுதிப்படுத் தினார். நிதி அமைச்சராக இருந்த அவருக்கு கூடுதல் பொறுப்பாக பாதுகாப்புத் துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறையையும் பிரதமர் மோடி அளித்தார்.

நிதியமைச்சராக பதவி வகித்த போது ஜேட்லி பல முக்கிய பொரு ளாதார முடிவுகளை எடுத்தார். குறிப்பாக, தேசிய அளவில் ஒரே வரியாக ஜேட்லி அறிமுகப்படுத்திய ஜி.எஸ்.டி. மிகவும் முக்கியமானது. இத்துடன், மத்திய அரசின் சர்ச் சைக்குரிய முடிவுகளையும் எதிர்க் கட்சிகளின் கடுமையான விமர் சனங்களையும் ஜேட்லி மிக லாவகமாக சமாளித்தார்.

பிரதமர் மோடியின் முதலாவது ஆட்சிக் காலத்தில் கடந்த 2018 மே 14-ம் தேதி ஜேட்லிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எனினும், 2018-ல் அவரின் மாநிலங்களவை பதவிக்காலம் நிறைவடைந்தபோது உத்தர பிரதேசத்தில் இருந்து மீண் டும் அவர் எம்.பி.யாக தேர்ந் தெடுக்கப்பட்டார். உடல்நலக் குறைவு காரணமாக அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிடாததுடன் அமைச்சரவை யிலும் பங்குபெறவில்லை. அப் போது எழுப்பப்பட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் வகையில் ஜேட்லி பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டார்.

அப்போதுமுதல் பத்திரிகை யாளர்களை சந்திப்பதை தவிர்த்த ஜேட்லி மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய விமர்சனங்களுக்கு கட்டுரைகள் மூலம் பதில் அளித்து வந்தார்.

டெல்லியின் பிரபல ஸ்ரீராம் கல்லூரியில் பி.காம். முடித்த ஜேட்லி டெல்லி பல்கலைக்கழகத்தில் 1977-ம் ஆண்டில் சட்டக் கல்வியை நிறைவு செய்தார். அப்போது பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்ய பரிஷத்தில் தீவிரம் காட்டியவருக்கு அதன் டெல்லி தலைவர் பதவி கிடைத்தது. கடந்த 1974-ம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவராகவும் தேர்ந் தெடுக்கப்பட்டார். சட்டப் படிப் புக்குப் பிறகு வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். கடந்த 1980 ஜனவரியில் பாரதிய ஜனதா கட்சி எனப் பெயர் மாற்றம் செய்யப் பட்ட ஜன சங் கட்சியில் இணைந் தார். அவருக்கு டெல்லி பாஜக இளைஞர் பிரிவின் செயலாளர் பதவி கிடைத்தது. 1991-ம் ஆண்டில் பாஜகவின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரானார். 1999-ல் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் அமர்த்தப்பட்ட ஜேட்லி பாஜக வின் முக்கியத் தலைவராக முன் னேறினார். வாஜ்பாயின் முதல் அமைச்சரவையில் தனிப்பொறுப் புடன் கூடிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், பொதுத் துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்க புதிய அமைச்சரவை உருவாக்கப் பட்டபோது அதற்கும் தனிப் பொறுப்பை ஏற்றார். பின்னர் கப் பல் போக்குவரத்து துறை அமைச்ச ராகவும் அவர் பொறுப்பு வகித்தார். 2000 ஆண்டில் மத்திய கேபினட் அமைச்சராக உயர்த்தப் பட்டார்.

கடந்த 2004-ம் ஆண்டில் மத்தி யில் ஆட்சி மாறி, ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு அமைந்த போது மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவராக ஜேட்லி பொறுப் பேற்றார். அப்போது முதலே கட்சி யின் முக்கிய வியூகங்களை வகுத்து வந்தார். கடந்த 2014-ன் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரச்சாரத்தை கொண்டு சென்றதில் அவரது புத்திசாலித்தனம் வெளிப்பட்டதாக எதிர்க்கட்சிகளும்கூட ஏற்றுக் கொண்டன. அவரின் மறைவு பாஜக வுக்கு பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x