நாடு ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரை இழந்துள்ளது: மன்மோகன் சிங் இரங்கல்

நாடு ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரை இழந்துள்ளது: மன்மோகன் சிங் இரங்கல்
Updated on
1 min read

புதுடெல்லி

மறைந்த முன்னாள் நிதிய மைச்சர் ஜேட்லியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோசன் சிங் ''நாடு ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரை இழந்துள்ளது'' என்று கூறியுள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி ஓராண்டாக சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சைப் பெற்றுவந்தார். நோயின் தன்மைதீவிரமடைந்த நிலையில் ஆகஸ்ட் 9 முதல் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி இன்று பிற்பகல் ஜேட்லி காலமானார். அவருக்கு வயது 66. ஜேட்லி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது இரங்கலை ஜெட்லியின் மனைவி சங்கீதா ஜெட்லிக்கு ஒரு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இரங்கல் கடிதத்தில் மன்மோகன் சிங் கூறியுள்ளதாவது:

"எங்கள் அன்புக்குரிய அருண் ஜெட்லியின் அகால மறைவின் சோகமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்தி கேட்டு ஆழ்ந்த துக்கத்தை அடைந்துள்ளேன். அவர்புகழ்பெற்ற ஒரு வழக்கறிஞர், சிறந்த சொற்பொழிவாளர், மேம்பட்ட ஒரு நிர்வாகி மற்றும் சிறந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். மக்கள் வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைத்துக்கொண்டிருந்த ஒரு உயர்ந்த தலைவரை நாடு இழந்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் தங்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பெரும் இழப்பை தைரியத்துடனும், துணிச்சலுடனும் தாங்கிக்கொள்ள உங்கள் அனைவருக்கும் பலம் அளிக்குமாறு சர்வ வல்லமையுள்ளவரிடம் பிரார்த்திக்கிறேன்" இவ்வாறு மன்மோகன் சிங் தனது இரங்கல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in