

மதுரா
மகா விஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்தநிலையில் உத்தர பிரதேசம், பிஹார், குஜராத் உட்பட பல வடமாநிலங்களிலும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி இன்று கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் பிறந்ததாக கூறப்படும் மதுராவில் உள்ள கிருஷ்ணனர் கோயில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். இதுபோலவே துவாரகா உட்பட பிற கிருஷ்ணர் கோயில்களிலும் கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.