Published : 24 Aug 2019 09:17 AM
Last Updated : 24 Aug 2019 09:17 AM

மக்களைச் சென்றடையக் கூடிய மொழியில் பேசுகிறார்; பிரதமர் நரேந்திர மோடியை எதிர்ப்பது உதவாது: காங்கிரஸ் தலைவர்கள் கருத்து

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பது உதவாது என்று காங் கிரஸ் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சசி தரூர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று முன்தினம் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசும் போது, "2014 முதல் 2019 வரை பிரதமர் மோடி ஆற்றிய பணிகளை நாம் அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது. அதனால்தான் அவர் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள் ளார். மக்களைச் சென்றடையக் கூடிய மொழியில் பிரதமர் மோடி பேசுகிறார்.

மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய செயல்களை அவர் செய்து கொண்டிருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளாதவரை அவரை நாம் எதிர்கொள்ள முடியவே முடியாது.

மேலும் எப்போதும் அவரை ஏதோ பிசாசு போன்று பாவித்து விமர்சனம் செய்வது ஒரு போதும் உதவாது. இத்தகைய அணுகுமுறையில் நீங்கள் அவரை எதிர்கொள்ளவே முடியாது" என்ற ரீதியில் பேசியிருந்தார்.

பிரதமர் மோடிக்கு ஆதரவான பேச்சு போன்று இது பரபரப்பாக பேசப்பட்டது.

எதிர்ப்பு பிரச்சாரம்

இந்நிலையில் அபிஷேக் சிங்வி நேற்று பதிவிட்ட ட்விட்டர் பதிவில், "பிரதமர் மோடியை பூதாகரமாக பாவித்துப் பேசுவது மட்டும் போதாது என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அவருக்கு எதிராக செய்யப்படும் ஒரே மாதிரியான எதிர்ப்புப் பிரச்சாரமானது அவருக்கு சாதகமாகவே முடியும் என்று நான் நினைக்கிறேன். கண்ணை மூடிக்கொண்டு பிரதமர் மோடியை எதிர்ப்பது உதவாது.

ஒருவரின் செயல்பாடுகள் நல்லவை, தீயவை அல்லது ஒரு சார்பாக இருக்கலாம். ஆனால், அந்த செயல்பாடுகளை பிரச்சினைகளின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்க்க வேண்டுமே தவிர அவற்றை தனிநபர் சார்ந்து மதிப்பிடக் கூடாது. ஏழை மக்கள் பயன்பெறக் கூடிய இலவச கேஸ் இணைப்புத் திட்டமான உஜ்வாலா திட்டம், மோடி யின் நல்ல திட்டம்தான்" என்று அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.

நல்ல திட்டங்கள்

இதேபோல் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூரும் ட்விட்டரில் நேற்று கருத்துப் பதிவு செய்துள்ளார். சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

இதைத்தான் நான் கடந்த 6 ஆண்டு காலமாக கூறி வருகிறேன். பிரதமர் மோடி நல்ல திட்டங்களைக் கொண்டு வரும்போது அதைப் பாராட்டவேண்டும். அவர் தவறு செய்யும்போதோ, தவறான திட்டங் களைக் கொண்டு வரும்போதோ அதை விமர்சனம் செய்யவேண்டும் என்று நான் கூறி வருகிறேன். கண்ணை மூடிக்கொண்டு பிரதமர் மோடியை எதிர்ப்பது சரியாக இருக்காது” என்றார் சசி தரூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x