

புதுடெல்லி
நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக மன்மோகன் சிங் (86) நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், மாநிலங்களவைக்கு 6-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு நேற்று தனது அறையில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவை முன்னவர் தாவர் சந்த் கெலாட், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, அகமது படேல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் பாஜக தலைவர்கள் சிலர் அப்போது உடனிருந்தனர்.
மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மன்மோகன் சிங்கிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த தக வலை வெங்கய்ய நாயுடு ட்விட் டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.
மன்மோகன் சிங் கடந்த 1991 முதல் அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 5 முறை தேர்வு செய்யப்பட்டு, கடந்த 28 ஆண்டுகளாக எம்.பி.யாக பதவி வகித்து வந்தார்.
2004 முதல் 2014 வரை பிரத மராக பதவி வகித்தார். அவரது எம்.பி. பதவிக் காலம் கடந்த ஜூன் 14-ம் தேதி நிறைவடைந்தது. அசாம் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது போதிய பலம் இல்லாததால், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் களில் ராம் ஜெத்மலானி (96), மோதிலால் வோரா (88), சி.பி.தாக்கூர் (88) ஆகியோரை தொடர்ந்து 4-வது மூத்த உறுப்பினர் மன்மோகன் சிங் (86) ஆவார். -பிடிஐ