காஷ்மீர்  சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பாக விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்த பாஜக முடிவு

காஷ்மீர்  சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பாக விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்த பாஜக முடிவு
Updated on
1 min read

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட சுமார் 2,000 முக்கியப் பிரமுகர் கலந்து கொள்ளும் இக்கூட்டங்கள் நாடு முழுவதிலும் நடைபெறவுள்ளன.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தேசிய அளவில் முழு ஆதரவு கிடைக்கவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்டந்தோறும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. இதன் மூலம், காஷ்மீர் விவ காரத்தில் எதிர்கட்சிகளின் பிரச் சாரத்தையும் முறியடிக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பாஜகவின் தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்கின் றனர்.

இந்தக் கூட்டங்கள் 370 சிறிய அரங்குகளில் நடைபெறுகின்றன. சுமார் 1,000 கூட்டங்கள் மாவட்ட அளவிலும், 35 கூட்டங்கள் முக்கிய நகரங்களிலும் நடை பெறவுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும் போது, ‘இந்தக் கூட்டங்களில் பேசுவதற்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2,000 பிரபலங் களை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக கட்சி சார்பில் ஒரு குழு அமைத்து அதனிடம் கூட்டங்களுக்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள் ளது’ எனத் தெரிவித்தார்.

விழிப்புணர்வு கூட்டங்களின் நிர்வாகக் குழுவில் மத்திய அமைச்சர்களான நாடாளுமன்ற விவகாரத் துறையின் பிரஹலாத் ஜோஷி, நீர்சக்தித் துறையின் கஜேந்திரசிங் ஷெகாவாத் மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத்துறையின் தர்மேந்திர பிரதான் ஆகியோர் உள்ளனர்.

இவர்களுடன் முன்னாள் அமைச்சரான ராஜ்யவர்தன்சிங் ராத்தோர், மக்களவை எம்.பி.க் களில் லடாக்கின் ஜம்யங் ஷெரீங் நம்க்யால், கர்நாடகாவின் சிக்மகளூரின் தேஜஸ்வீ சூர்யா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in