Published : 23 Aug 2019 08:12 AM
Last Updated : 23 Aug 2019 08:12 AM

காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க கோரி டெல்லியில் 15 கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்: குலாம்நபி ஆசாத், டி.ஆர்.பாலு, யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை

காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை உடனடியாக விடு தலை செய்யக்கோரி திமுக, காங் கிரஸ் உட்பட 15 கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் டெல்லியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப் பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து முன் னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உட்பட காஷ்மீரின் முக்கியத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வீட்டுக் காவலில் உள்ள தலைவர் களை உடனடியாக விடுவிக்கக் கோரி நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், அக்கட்சியின் முதன்மைச் செயலாளருமான டி.ஆர்.பாலு தலைமையில் டெல்லி ஜந்தர்மந்தரில் நேற்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலை வரும், காங்கிரஸ் மூத்த தலைவரு மான குலாம்நபி ஆசாத், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செய லாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவ், லோக்தாந்திரிக் ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாளம் மூத்த தலைவர் மனோஜ் ஜா, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் தினேஷ் திரிவேதி உட்பட 15 கட்சிகளின் எம்.பி.க்களும், முக்கியத் தலை வர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

ஜம்மு காஷ்மீர் மக்களையோ, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையோ ஆலோசிக்கா மல் அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் மூலம் அங்கு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை மத்திய அரசு அமல் படுத்தியுள்ளது. இந்த நெருக்கடி யான காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக நாங்கள் துணை நிற்கிறோம்.

தகவல் தொடர்புகள் அனைத் தும் துண்டிக்கப்பட்டு முன்னாள் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர் கள், முன்னாள் எம்எல்ஏக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கல்வியாளர்கள் என்று ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப் பது கவலை அளிக்கிறது. வீட்டுச் சிறையில் உள்ள தலைவர்களை யும், அப்பாவி மக்களையும் உடனடி யாக விடுதலை செய்ய வேண்டும்.

பேச்சுரிமை, சுதந்திர நடமாட்டம் போன்ற அடிப்படை உரிமைகளை பறிக்கும் ஊரடங்கு உத்தரவு போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஜம்மு காஷ்மீர் மாநிலத் தில் இயல்பு நிலை திரும்பவும், அங் குள்ள மக்கள் தங்களது உறவினர் களை தொடர்பு கொள்ளும் வகை யில் தகவல் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த தயாநிதி மாறன், டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா, எஸ்.ஜெகத்ரட்சகன், ஆர்.எஸ்.பாரதி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், முஸ் லிம் லீக் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத் தில் பங்கேற்றனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வில்லை.

முன்னாள் மத்திய நிதியமைச் சர் ப.சிதம்பரம் கைது செய்யப் பட்ட நிலையில் அவரது மகனும், எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண் டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x