Published : 23 Aug 2019 08:08 AM
Last Updated : 23 Aug 2019 08:08 AM

ஐஎல் அண்ட் எப்எஸ் மோசடி வழக்கில் அமலாக்கத் துறை முன்பு ஆஜரானார் ராஜ் தாக்கரே

மும்பை

ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவன நிதி மோசடி வழக்கில் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரேவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

மகாராஷ்டிர முன்னாள் முதல் வரும் சிவசேனா மூத்த தலைவரு மான மனோகர் ஜோஷியின் மகன் உன்மேஷ் ஜோஷி, ராஜ் தாக்கரே மற்றும் கட்டுமான தொழிலதிபர் ரஞ்சன் ஷிரோத்கர் ஆகியோர் இணைந்து கோகினூர் சிடிஎன்எல் நிறுவனத்தை 2005-ல் தொடங்கினர். இந்நிறுவனத்துக்கு பங்கு முதலீடாகவும் கடனாகவும் ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனம் சுமார் ரூ.450 கோடி வழங்கியது.

இந்நிறுவனம் சார்பில் மும்பை யின் தாதர் பகுதியில் கோஹினூர் சதுக்கம் என்ற பெயரில் கட்டிடம் கட்டப்பட்டது. இதில் சட்ட சிக்கல் எழுந்ததால், ஐஎல்எப்எஸ் மற்றும் ராஜ் தாக்கரே தங்கள் பங்குகளை விற்றனர். இதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக உன்மேஷ் ஜோஷியிடம் அதிகாரிகள் 2 தினங் களுக்கு முன்பு விசாரணை நடத் தினர். இந்நிலையில், அவருடன் சிறிது காலம் தொழில் கூட்டாளி யாக இருந்த எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரேவுக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதன்படி, தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலு வலகத்தில் நேற்று காலை 11.30 மணிக்கு ராஜ் தாக்கரே ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ராஜ் தாக்கரேவுடன் மனைவி ஷர்மிளா, மகன் அமித் மற்றும் மரு மகள் மிதாலியும் சென்றிருந்தனர். ஆனால், அவர்கள் அருகில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தனர். முன்னதாக, ராஜ் தாக்கரே ஆதர வாளர்கள் போராட திட்டமிட்டிருந் தனர். ஆனால் போராட்டம் நடத்த வேண்டாம் என தாக்கரே கேட்டுக் கொண்டார். எனினும், அமலாக்கத் துறை அலுவலகம், ராஜ் தாக்கரே வீடு அமைந்துள்ள தாதர் மற்றும் மத்திய மும்பை உள்ளிட்ட சில பகுதி களில் மும்பை போலீஸார் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர். வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x