Published : 22 Aug 2019 07:26 PM
Last Updated : 22 Aug 2019 07:26 PM

2011-ல் திறப்பு விழாவில் உள்துறை அமைச்சராகப் பங்கேற்ற அதே சிபிஐ கட்டிடத்தில் கைதுக்குப் பிறகு இரவைக் கழித்த ப.சிதம்பரம்

2011-ல் சிபிஐ புதிய தலைமைச் செயலகக் கட்டிடத் திறப்பு விழாவில் ப.சிதம்பரம், மன்மோகன் சிங், கபில் சிபல். | படம்: சந்தீப் சக்சேனா

புதுடெல்லி, பிடிஐ

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐ-யினால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் ஆகஸ்ட் 21ம் தேதி இரவு இருந்த அதே சிபிஐ தலைமைச் செயலகக் கட்டிடத்தின் திறப்பு விழா ஏப்ரல் 30, 2011-ல் நடந்த போது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குடன் பங்கேற்றார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தொடர்ச்சியான 2வது ஆட்சியின் போது 2011-ல் கண்ணாடி அமைப்புகள் கொண்ட இந்தக் கட்டிடத் திறப்பு விழாவில் ப.சிதம்பரம் பங்கேற்றார், 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நிலைமை தலைகீழாக மாறி கைது செய்யப்பட்டு அதே கட்டிடத்தில் அவர் இரவைக் கழிக்க நேரிட்டது.

இந்தப் புதிய சிபிஐ கட்டிடத்தை 2011-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அப்போதைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்றார்.

அப்போது இந்த புதிய சிபிஐ கட்டிடத்தின் திறப்பு விழா இருந்ததனால் காமன்வெல்த் ஊழலில் சிக்கிய சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டு பழைய சிபிஐ கட்டிடத்தில்தான் இருக்க நேரிட்டது.

அப்போது ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார் ப.சிதம்பரம், அப்போது சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல்.

அப்போதைய சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங். இவர்களுக்கு அந்தக் கட்டிடத்தை சுற்றிக் காட்டினார். இதில் இவர் காட்டிய கெஸ்ட் ஹவுஸில்தான் ப.சிதம்பரம் தற்போது கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளார்.

சிபிஐயில் உள்ள சில அதிகாரிகள் நகைச்சுவையாக கட்டிட ‘வாஸ்து’ சரியில்லை, ஏனெனில் இது சுடுகாட்டு இடத்தில் கட்டப்பட்டுள்ளது, இந்தக் கட்டிடம் வந்ததிலிருந்தே பல சர்ச்சைகள் ஒன்றையடுத்து ஒன்று வந்து கொண்டேயிருக்கிறது என்றனர்.

இந்நிலையில் தான் திறப்பு விழாவில் பங்கேற்ற அதே சிபிஐ கட்டிடத்தில் இரவை கழித்துள்ளார் ப.சிதம்பரம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x