Published : 21 Aug 2019 10:16 PM
Last Updated : 21 Aug 2019 10:16 PM

சிதம்பரம் கைது; தமிழகத்துக்கு தலைகுனிவு: தமிழிசை கருத்து

சென்னை
தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது தலைகுனிவு என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இந்தநிலையில் இன்று இரவு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக அவர் வீட்டுக்குள் சென்ற பிறகு வீட்டுக்கதவு மூடப்பட்டது. இதனிடையே சிபிஐ அதிகாரிகள் டெல்லி வீட்டுக்கு வந்தனர். ஆனால் காவலாளி அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக்குறித்து உள்ளே சென்று கைது செய்தனர்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
‘‘தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது தலைகுனிவு. வீட்டை பூட்டிக் கொண்டு திறக்காமல் இருந்ததால் தான் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்று அவரை கைது செய்யும் சூழல் ஏற்பட்டது. இதுபோன்று சிதம்பரம் நடந்து கொண்டது வியப்பாக இருக்கிறது. இவ்வாறு நடந்ததற்கு அவரே பொறுப்பு’’ எனக் கூறினார்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x