ப.சிதம்பரத்துக்கு எதிராக ரூ10 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டு தனியார் நிறுவனம் வழக்கு: மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்: கோப்புப்படம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்: கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை,

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு எதிராக ரூ.10 ஆயிரம்கோடி இழப்பீடு கேட்டு, 63 மூன் டெக்னாலஜிஸ் நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இதையடுத்து, ப.சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்ப மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ப.சிதம்பரம் தரப்பிலும் நிறுவனத்தின் புகார் மற்றும் அது தொடர்பான ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மும்பை உயர் நீதிமன்றத்தில் 63 மூன்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் சார்பில் கடந்த ஜூன் 12-ம் தேதி ப.சிதம்பரம், திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் கே.பி.கிருஷ்ணன், பார்வோர்டு மார்கெட் கமிஷன் தலைவர் ரமேஷ் அபிஷேக் ஆகியோருக்கு எதிராக புகார் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் "காங்கிரஸ் ஆட்சியி்ல் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார். அப்போது, எங்கள் நிறுவனத்தை குறிவைத்து, ப.சிதம்பரம் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஏராளமான தொல்லைகளைக் கொடுத்தார். எங்கள் நிறுவனத்தின் மீது பல்வேறு அரசு அமைப்புகள் விசாரணையும், சோதனையும் நடத்தியதில் எந்தவிதமான பணமுறைகேடும், மோசடியும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது.

மும்பை உயர் நீதிமன்றம் : கோப்புப்பபடம்

ஆனால் எங்கள் நிறுவனத்துக்கு எதிராக ப.சிதம்பரம், கிருஷ்ணன், அபிஷேக் ஆகியோர் சதித்திட்டம் தீட்டித்தான் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். எங்கள் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கு ஈடாக ரூ.10 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கடந்த 14-ம் தேதி சிதம்பரத்தின் வழக்கறிஞர் நிதேஷ் ஜெயின், நீதிமன்றத்தில் 63 மூன்ஸ் டெக்னாலஜி தாக்கல் செய்த புகார், அதுதொடர்பான ஆவணங்களை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, 63 மூன்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் பவேஷ் தாக்கூர், " ப.சிதம்பரம் தரப்பில் கேட்டுக்கொண்டதுபோல் புகார் மனு, அதுதொடர்பான ஆவணங்களை அனுப்பிவிட்டோம்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, வரும் அக்டோபர் மாதம் 15-ம் தேதி ப.சிதம்பரம், இரு அதிகாரிகளான கே.பி. கிருஷ்ணன், ரமேஷ் அபிஷேக் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவி்ட்டார்


பிடிஐ

அமலாபாலுக்கு எவ்வளவு தைரியம்!: வசுந்தரா பேட்டி - வீடியோ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in