

புதுடெல்லி
ஆகஸ்ட் 15ம் தேதியன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு முன்னான் நடைபெற்ற ஆர்பாட்டங்கள் குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் பிரதமர் பேசியதாக வெளியுறவு அமைச்சகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 20ம் தேதி (செவ்வாய்கிழமை), தொலைபேசி உரையாடலில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கவனத்துக்கு லண்டன் ஆர்ப்பாட்டங்களைபிரதமர் மோடி கொண்டு சென்றார்.
“இந்திய தூதரகத்துக்கு முன்பாக இந்திய சுதந்திர தினத்தன்று இந்தியாவுக்கு எதிரான ஆர்பாட்டங்களில் நடந்த வன்முறை குறித்து பிரிட்டன் பிரதமரிடம் இந்தியப் பிரதமர் மோடி பேசினார். பிரிட்டன் பிரதமர் சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்தார்” என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
காஷ்மீரின் சமீபத்திய முடிவுகள் குறித்து பிரிட்டன் தன் கருத்தை எதையும் இதுவரை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-சிறப்புச் செய்தியாளர்