

மும்பை
கோகினூர் சிடிஎன்எல் நிறுவ னத்தில் பங்கு முதலீடாகவும் கடனாகவும் ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனம் ரூ.450 கோடிக்கு மேல் வழங்கியதில் நடந்த முறைகேடு கள் குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
கோகினூர் சிடிஎன்எல் நிறுவ னம், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷியின் மகன் உன்மேஷ் ஜோஷிக்கு சொந்தமானது ஆகும். எனவே இந்த முறைகேடு தொடர்பாக உன்மேஷ் ஜோஷிக்கும் அவருடன் சிறிது காலம் தொழில் கூட்டாளி யாக இருந்த மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரேவுக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதில் உன்மேஷ் ஜோஷி, மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத் தில் நேற்று முன்தினம் விசா ரணைக்கு ஆஜரானார். இந்நிலை யில் ராஜ் தாக்கரே நாளை (ஆக.22) ஆஜராகிறார்.
முன்னதாக அமலாக்கத் துறை யின் நோட்டீஸ், அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என எம்என்எஸ் கூறியது. தானே மாவட் டத்தில் நாளை முழு அடைப்பு போராடத்துக்கும் அழைப்பு விடுத்தது. இந்நிலையில் போராட் டம் கைவிடப்படுவதாகவும் விசாரணைக்கு ராஜ் தாக்கரே ஆஜராவார் என்றும் எம்என்எஸ் நேற்று அறிவித்தது.