Published : 20 Aug 2019 08:43 AM
Last Updated : 20 Aug 2019 08:43 AM

ஷூக்கள் இல்லாமல் தார் சாலையில் வெறும் கால்களுடன் 100 மீட்டர் தூரத்தை 11 விநாடியில் ஓடி கடந்த ம.பி. இளைஞர்

போபால் 

மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளை ஞர் ஒருவர், வெறும் காலுடன் 100 மீட்டர் தொலைவை 11 விநாடிகளில் கடக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதைத் தொடர்ந்து அவருக்கு உதவி செய்ய அரசு முன்வந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியை சேர்ந்த ரமேஷ்வர் குர்ஜார் என்பவர் வெறும் காலுடன் அதுவும் தார் சாலையில் 100 மீட்டர் தொலைவை 11 விநாடி களில் மின்னல் வேகத்தில் கடக் கும் வீடியோ ஒன்று கடந்த சில நாட் களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இதைத் பார்த்த உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார்.

மேலும், “இதுபோன்ற திறமை யான வீரர்களால் இந்தியா ஆசீர் வதிக்கப்பட்டுள்ளது. சரியான வாய்ப்பு, அடித்தளம் அமைத்துக் கொடுத்தால் ரமேஷ்வர் குர்ஜார் போன்ற வீரர்கள் வண்ணச் சிறகு களாய் சிறகடித்து வரலாற்று சாதனை படைப்பார்கள். ரமேஷ்வர் குர்ஜார் தனது திறனை மேம்படுத் திக்கொள்ள மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆதரவு அளிக்க வேண்டும்” எனவும் தெரிவித்திருந்தார் ஷிவ் ராஜ் சிங் சவுகான்.

ஷிவ்ராஜ் சிங் சவுகான் பதிவை கண்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், “அந்த இளைஞரின் விவ ரங்களை விசாரித்து உடனே என் னிடம் அழைத்து வாருங்கள். அவரை தடகள பயிற்சி மையத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன்” என தெரிவித் திருந்தார்.

இதைத் தொடர்ந்து போபாலில் உள்ள தடகள அகாடமி ஒன்றில் வேக சோதனைக்காக ரமேஷ்வர் குர்ஜார் அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை ஏற்று ரமேஷ்வர் குர்ஜார், தடகள அகாடமிக்கு சென் றுள்ளார். மத்திய பிரதேச மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ஜீது பட்வாரி கூறுகையில், ரமேஷ் வர் குர்ஜாருக்கு சரியான வகையில் வழிகாட்டினால் அவர், நாட்டின் சொத்தாக விளங்குவார். தற் போது அவர் போபாலில் உள்ள அகாடமியில் உள்ளார். வரும் நாட் களில் அனுபவமுள்ள பயிற்சி யாளர்கள் ரமேஷ்வர் குர்ஜாரின் திறமைகளை சோதிப்பார்கள். இதே அகாடமியில் அவர் சேர லாம். சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு அவருக்கு பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.

இதற்கிடையே ரமேஷ்வர் குர் ஜார் கூறுகையில், “தொலைந்து போன எனது எருமை மாடுகளை தேடிக்கொண்டிருந்தேன். அப் போதுதான் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இருந்து அழைப்பு வந்தது. உசேன் போல்ட்டை டி.வியில் பார்க்கும் போதெல் லாம் இந்தியர்கள் ஏன் அவரது சாதனையை முறியடிக்க முடியாது என்று யோசிப்பேன். வசதிகளும், முறையான பயிற்சிகளும் எனக்கு கிடைக்கும் பட்சத்தில் உசேன் போல்ட்டின் சாதனையை என்னால் முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.முறையான பயிற்சி கிடைக்கும் பட்சத்தில் உசேன் போல்ட்டின் சாதனையை என்னால் முறியடிக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x