

ஆர்.ஷபிமுன்னா
புதுடெல்லி
உத்தரபிரதேசத்தின் ஸரவஸ்தி மாவட்டம், கட்ரா கிராமத்தில் மணமாகி தன் ஐந்து வயது குழந்தை யுடன் வாழ்ந்து வந்தவர் சயிதா. இவருடன் மும்பையில் பணியாற் றும் கணவர் நபீஸ் கானின்(26) பெற்றோரும் வசிக்கின்றனர்.
கடந்த 6-ம் தேதி சயிதாவிற்கு போன் செய்த நபீஸ், மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்துள் ளார். இதுகுறித்து, தந்தை ரம்ஜான் கானுடன் அருகிலுள்ள பிங்காபூர் காவல் நிலையத்தில் சயீதா புகார் அளித்துள்ளார். அப்போது போலீ ஸார் நபீஸ் மும்பையில் இருந்து வந்த பின் பேசிக்கொள்ளலாம் எனக் கூறி அனுப்பி வைத்துள்ளனர். பிறகு ஆகஸ்ட் 15-ல் வீடு திரும்பிய நபீஸுடன் சயீதாவையும் அழைத்து பேசிய போலீஸார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து தன் கணவர் வீட்டிலேயே சயீதா வசித்து வந்தார். வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை முடித்து வந்த நபீஸ், தான் முத்தலாக் கூறி விவாகரத்து அளித்து விட்டதால் தனது வீட்டை விட்டு வெளியேறுமாறு சயீதாவை விரட்டியுள்ளார். இதை தொடர்ந்து இருவருக்குள் எழுந்த வாய்த்தக ராறில் நபீஸின் குடும்பத்தாரும் தலையிட அது முற்றியுள்ளது. இதில், சயீதா மீது மண்ணெண் ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். இதனால், சயீதா உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தை நேரில் பார்த்த அவரது ஐந்து வயது மகள் காவல் நிலையத்தில் அதை விவரித்துள் ளார். இதன் அடிப்படையில் நபீஸ், அவரது தந்தையான அஜீஸுல்லா கான், தாய் ஹசீனாகான் மற்றும் சகோதரி குடியா ஆகியோர் மீது வரதட்சணை மற்றும் கொலை வழக்குகள் பதிவாகி விசாரணை நடைபெறுகிறது.
கடந்த 1-ம் தேதி முத்தலாக் சட்டம் அமலாக்கப்பட்ட பின்பும் அவை முற்றிலும் தடுக்கப்படாத நிலை உள்ளது. உ.பி.யில் மட்டும் ஆகஸ்ட் 1-க்கு பின் 6 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில், சயீதா தீயிட்டு கொளுத்தி பலியாகும் அளவிற்கு பரிதாபமும் நிகழ்ந் துள்ளது. குஜராத் 3, மகாராஷ்டிரா 2, ஆந்திரா, உத்தராகண்ட், டெல்லி மற்றும் கேரளா ஆகிய மாநிலங் களிலும் தலா ஒரு வழக்குகள் பதிவாகி விசாரணை நடைபெற்று வருகின்றன. இதில், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் ஆந்திராவில் மட்டும் கைதாகி பெயில் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் கைதுகளும் நடை பெறவில்லை. பதிவான புகார்கள் மீது போலீஸார் சமாதானம் செய்து வைக்க முயல்வது இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.