

புதுடெல்லி:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார் என்று பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
“இந்த உரையாடல் பிராந்திய விவகாரங்கள், இருதரப்பு உறவுகள் பேசப்பட்டன. இருநாட்டு தலைவர்களின் சுமுகமான உறவுகளை அடையாளப்படுத்துவதாக அமைந்தது” என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய அமைதி குறித்து பேசும் போது, “சில தலைவர்களின் மிதமிஞ்சிய கருத்துகள் பேச்சுக்கள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் வகையிலான போக்குகள் அமைதிக்கு உகந்ததாக இல்லை” என்று ட்ரம்பிடம் தெஇவித்தார்.
பிரதமர் அலுவலக அறிக்கையின் படி, பிரதமர் மோடி பயங்கரவாதமற்ற சூழ்லின் அவசியத்தையும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை விதிவிலக்கின்றி முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய முக்கியத்துவத்தையும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் வலியுறுத்தியுள்ளார். இந்த வழியில் வருவோருடன் இந்தியா எப்போதும் ஒத்துழைப்பு நல்கும். அதாவது வறுமை, கல்வியின்மை, நோய் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் பாதையில் வருவோருடன் கூட்டுறவு வைத்துக் கொள்வது இந்தியாவின் கடப்பாடு என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கான் பற்றி ட்ரம்பிடம் அவர் கூறியதாக பிரதமர் அலுவலக அறிக்கை கூறுவதென்னவெனில், ஒற்றுமையான, பாதுகாப்பான, ஜனநாயகமான, உண்மையான சுதந்திர ஆப்கானிஸ்தானுக்காக இந்தியா பாடுபடும் என்று தெரிவித்துள்ளார்.