Published : 19 Aug 2019 10:07 AM
Last Updated : 19 Aug 2019 10:07 AM

குடிபோதையில் ஓட்டுநர்; நடைபாதையில் தாறுமாறாக காரை ஓட்டி பலர் காயம்: வீடியோ காட்சி

பெங்களூரு

பெங்களூருவில் குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டி நடைபாதை மேல் ஓட்டிச் சென்றதில் அப்பாவி மக்கள் பலர் காயமடைந்துள்ளனர். கார் மோதிய சிசிடி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எச்எஸ்ஆர் லேஅவுட் பகுதி மக்கள் நடமாட்டம் உள்ள இடம். இங்கு நேற்று வழக்கம்போல் வாகனங்கள் சாலையில் சென்று கொண்டிருந்தன. நடைபாதையில் மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் ஒன்று திடீரெ அந்த பகுதியில் உள்ள நடைமேடை மீது ஓடியது.

அங்கு நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது கார் வேகமாக மோதித் தள்ளியது. அசுர வேகத்தில் வந்த கார் நிற்காமல் நடைபாதையில் ஓடி இறுதியாக மோதி நின்றது. கார் மோதியதில் நடைபாதையில் நடந்து சென்றவர்கள் பலர் காயமடைந்தனர். சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், தள்ளு வண்டி கடைகள் சேதமடைந்தன.

இந்த காட்சிகள் நடைமேடை பகுதியில் அமைந்துள்ள கடையில் இருந்த சிசிடி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்பாது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த காரை ஓட்டி வந்த நபர் குடிபோதையில் இருந்ததும் அவருடன் சேர்ந்து சிலர் பயணம் செய்துள்ளதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களை கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x