Published : 19 Aug 2019 10:01 AM
Last Updated : 19 Aug 2019 10:01 AM

காஷ்மீரில் தொடரும் தடுப்புக் காவல்; உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டும் ஒமர் புத்தகத்தில் மூழ்கிய மெகபூபா முப்தி

ஸ்ரீநகர்

காஷ்மீரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒமர் அப்துல்லா உடற் பயிற்சியிலும், மெகபூபா முப்தி புத்தக வாசிப்பிலும் ஈடு பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காஷ்மீருக்கான சிறப்பு அந் தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழ்நிலை நில வியது. எனவே, அசம்பாவிதச் சம் பவங்களை தவிர்ப்பதற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. பிரிவினைவாதத் தலைவர் கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, அம் மாநில முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி, முன்னாள் முதல் வரும், தேசிய மாநாட்டுக் கட்சி மூத்த தலைவருமான ஒமர் அப்துல்லா ஆகியோர் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தடுப்புக் காவலில் வைக் கப்பட்டுள்ளனர்.

நகரில் உள்ள அரசு விருந் தினர் இல்லத்தில் ஒமர் அப்துல்லா வும், மாநில சுற்றுலாத் துறைக்கு சொந்தமான மாளிகையில் மெக பூபா முப்தியும் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில், தடுப்புக் காவ லில் உள்ள ஒமர் அப்துல்லா, தினமும் உடற்பயிற்சிக் கூடத் துக்கு சென்று பயிற்சி செய்வ தாக தகவல்கள் தெரிவிக்கின் றன. மேலும், அவர் கேட்டுக் கொண்டதன் படி, அவருக்கு ஆங் கில திரைப்படங்களின் டிவிடி-க் கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல, மெகபூபா முப்தி அங்குள்ள நூலகத்திலேயே பெரும்பாலான நேரத்தை செலவிடுவதாக தெரிகிறது. அவர் ஆங்கில நாவல்களை விரும்பி படித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய மாநாட்டுக் கட்சி யின் தலைவர் பரூக் அப் துல்லா வீட்டுச் சிறையில் அடைக் கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, காஷ்மீரில் தடுப்புக் காவல் மற்றும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x