கர்நாடக அணைகளின் நீர் இருப்பு நிலவரம்

கர்நாடக அணைகளின் நீர் இருப்பு நிலவரம்
Updated on
2 min read

பெங்களூரு

தமிழகத்திற்கு கர்நாடக மாநிலத் தில் உற்பத்தியாகும் காவிரியில் இருந்துதான் பிரதானமாக தண்ணீர் கிடைக்கிறது. இந்த ஆண்டு நாட் டின் பல பகுதிகளில் சராசரியை விட அதிக அளவு மழை பெய்துள்ள தால் கர்நாடகாவில் அணைகள் நிரம்பி வழிகின்றன. அதன் விவரம்:

138.11 டிஎம்சி லிங்கனமக்கி:

இந்த அணையின் மொத்த கொள்ளளவு 147.42 டிஎம்சி. தற்போது 91 சதவீதம் நிரம்பியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 139.59 டிஎம்சி நீர் இருப்பு இருந்தது.

138.47 டிஎம்சி சுபா: மொத்த கொள்ளளவு 145.33 டிஎம்சி. தற்போது அணை 95 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளது. கடந்த ஆண்டு 122.69 டிஎம்சி நீர் இருந்தது.

17.90 டிஎம்சி வராகி: மொத்த கொள்ளளவு 31.10 டிஎம்சி. தற்போது 58 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. கடந்த ஆண்டு 28.97 டிஎம்சி நீர் இருப்பு இருந்தது.

7.71 டிஎம்சி ஹேரங்கி: மொத்த கொள்ளளவு 8.07 டிஎம்சி. 96 சதவீதம் அணை நிரம்பியுள்ளது. கடந்த ஆண்டு 7.68 டிஎம்சி நீர் இருப்பு இருந்தது. தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் அணைகளில் இதுவும் ஒன்று.

35.28 டிஎம்சி - ஹேமாவதி: மொத்த கொள்ளளவு 35.76 டிஎம்சி. இந்த அணை 99 சதவீதம் நிரம்பியுள்ளது. கடந்த ஆண்டு 33.49 டிஎம்சி நீர் இருப்பு இருந் தது.

45.05 டிஎம்சி கிருஷ்ண ராஜ சாகர்: மொத்த கொள் ளளவு 45.05 இந்த அணை 100 சதவீதம் நிரம்பியுள்ளது.

கடந்த ஆண்டு 38.58 டிஎம்சி நீர் இருப்பு இருந்தது. தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் அணைகளில் இதுவும் ஒன்று.

15.49 டிஎம்சி கபினி: மொத்த கொள்ளளவு 15.67 டிஎம்சி. இந்த அணை 99 சதவீதம் நிரம்பியுள்ளது. கடந்த ஆண்டு 13.39 டிஎம்சி நீர் இருப்பு இருந்தது. தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் அணைகளில் இதுவும் ஒன்று.

60.16 டிஎம்சி பத்ரா: மொத்த கொள்ளளவு 63.04 டிஎம்சி. இந்த அணை 95 சதவீதம் நிரம்பியுள்ளது. கடந்த ஆண்டு 59.51 டிஎம்சி நீர் இருப்பு இருந்தது.

100.86 டிஎம்சி துங்கபத்ரா: மொத்த கொள்ளளவு 100.86 டிஎம்சி. இந்த அணை 100 சதவீதம் நிரம்பியுள்ளது. கடந்த ஆண்டு 91.26 டிஎம்சி நீர் இருப்பு இருந்தது.

48.53 டிஎம்சி கதபத்ரா: மொத்த கொள்ளளவு 48.98 டிஎம்சி. இந்த அணை 99 சதவீதம் நிரம்பியுள்ளது. கடந்த ஆண்டு 48.98 நீர் இருப்பு இருந்தது.

33.23 டிஎம்சி மலப்பிரபா: மொத்த கொள்ளளவு 34.35 டிஎம்சி. அணை 97 சதவீதம் நிரம்பியுள்ளது.

கடந்த ஆண்டு நீர் இருப்பு 18.36 டிஎம்சி-யாக இருந்தது.

97.85டிஎம்சி - அலமாட்டி: மொத்த கொள்ளளவு 119.26 டிஎம்சி. இந்த அணை 82 சதவீதம் நிரம்பியுள்ளது. கடந்த ஆண்டு 116.26 டிஎம்சி நீர் இருப்பு இருந்தது.

15.39 டிஎம்சி நாராயணபுரா: மொத்த கொள்ளளவு 26.14 டிஎம்சி. இந்த அணை 59 சதவீதம் நிரம்பியுள்ளது. கடந்த ஆண்டு 23.57 டிஎம்சி நீர் இருப்பு இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in